OUR CLIENTS
வ.உ.சியின் 147வது பிறந்தநாள்- தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
வ.உ.சியின் 147வது பிறந்தநாள்- தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை Posted on 05-Sep-2018 வ.உ.சியின் 147வது பிறந்தநாள்- தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

சென்னை, செப். 5
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 147 பிறந்தநாள் (செப்டம்பர் 5, 1872 – நவம்பர் 18, 1936) இன்று  கொண்டாடப்பட்டது.

சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள வ.உ.சியின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செய்தனர். இவ்விழாவில், மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா. பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஜெயவர்தன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா. வளர்மதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா. வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ. சங்கர், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்

Label