OUR CLIENTS
வினாத்தாள் வெளியிட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்- உத்தரபிரதேச அரசு முடிவு
வினாத்தாள் வெளியிட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்- உத்தரபிரதேச அரசு முடிவு Posted on 05-Sep-2018 வினாத்தாள் வெளியிட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்- உத்தரபிரதேச அரசு முடிவு

லக்னோ, செப். 5
உத்தர பிரதேச மாநிலத்தில் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அடிக்கடி வெளியாகும் நிலையில், குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் வினாத்தாள்கள் வெளியானதற்கு பொறுப்பான அமைப்புகளை எதிர்காலத்தில் அரசு பயன்படுத்துவதைத் தவிர்க்க அவற்றை கருப்புப் பட்டியலில்  சேர்க்கவும் அந்நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுவதாக அவர் கூறினார். தேர்வுகள் நியாயமான முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை அரசு பொறுத்து கொள்ளாது. தேர்வு நடைமுறைகளை மாசுப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேர்வுகளில் தவறு நடக்காமல் இருக்கவும் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நிரப்பவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு முதல்வர் அறிவுறுத்தி உளளார். உ.பி. உதவி சேவை தேர்வு ஆணையம் நடத்திய தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய 11 பேரை கடந்த வாரம் உ.பி சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். இதையடுத்து உ.பி. சர்வீஸ் கமிஷன் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

வினாத்தாள் வெளியாவதைத் தடுக்கும் வகையில் இரண்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். அப்போதுதான் ஒரு வினாத்தாள் வெளியாகும் பட்சத்தில் மற்றொன்றை பயன்படுத்தி கொள்ளலாம்  என்று சர்வீஸ் கமிஷன் சேர்மன் சி.பி. பாலிவால் தெரிவித்தார். கடந்த ஜூலை 29 ஆம் தேதி, உதவி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 51 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆள் மாறாட்டம் மற்றும் ரகசிய மைக் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத்தை தேர்வின் போது பயன்படுத்திய விவகாரத்தில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி உதவி ஆய்வாளருக்கான ஆன்லைன் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.

Label