OUR CLIENTS
விரைவில்ல் புதிய கட்சி துவங்குவேன் - நடிகர் கார்த்திக் பேட்டி
விரைவில்ல் புதிய கட்சி துவங்குவேன் - நடிகர் கார்த்திக் பேட்டி Posted on 07-Sep-2018 விரைவில்ல் புதிய கட்சி துவங்குவேன் - நடிகர் கார்த்திக் பேட்டி

மதுரை, செப். 7-
இன்னும் ஓரிரு நாட்களில் புதிய பெயரில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக, நடிகர் கார்த்திக் இன்று தெரிவித்திருக்கிறார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் கார்த்திக், அப்போது, 2016 -ம் ஆண்டுக்குப் பிறகு சில நெருடல்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தேன் எனlத் தெரிவித்தார்.
அவரிடம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்திக், பகுதி நேர அரசியல்வாதியாக இருக்கக் கூடாது. அது எனக்கும் பொருந்தும். இனி முழு நேர அரசியலில் இறங்கியுள்ளேன். அரசியலில் ரஜினி, கமல் இருவருக்கும் நான் சீனியராக இருக்கலாம். ஆனால், வயதிலும், சினிமாவிலும் அவர்களுக்கு நான் ஜூனியர் தான். ஆனால், நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை கர்வத்துடன் சொல்வேன் என கார்த்திக் தெரிவித்தார்.

மறைந்த மூத்த நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். பல தமிழ் திரைப்படங்களில் நடித்த கார்த்திக், பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். பின்னர், அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். சரிவர பணியாற்றவில்லை எனக்கூறி, பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் கார்த்திக். 2009-ம் ஆண்டில் “நாடாளும் மக்கள் கட்சி” என்ற பெயரில் கட்சியை தொடங்கினார் கார்த்திக். ஆனாலும், அவர் தன் அரசியல் பணிகளிலிருந்து கடந்த சில வருடங்களாக ஒதுங்கியே இருந்தார்.

Label