OUR CLIENTS
முன்கூட்டியே தேர்தல் நடத்தும் ஆளும் கட்சியின் தந்திரம் பலிக்காது- காங்கிரஸ் காட்டம்
முன்கூட்டியே தேர்தல் நடத்தும் ஆளும் கட்சியின் தந்திரம் பலிக்காது- காங்கிரஸ் காட்டம் Posted on 07-Sep-2018 முன்கூட்டியே தேர்தல் நடத்தும் ஆளும் கட்சியின் தந்திரம் பலிக்காது- காங்கிரஸ் காட்டம்

புதுடெல்லி, செப். 7-

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து மேட்ச் பிக்ஸிங் செய்து சட்டப்பேரவையை கலைத்துள்ளனர் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

தெலங்கானாவில் 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு பதவியேற்றது. தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தலைமையிலான இந்த அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ளன. ஆனால், முன் கூட்டியே பேரவைத் தேர்தலை சந்திக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்தார்.

முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், முதல்வர் சந்திரசேகர ராவ், ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மனை நேரில் சந்தித்து அந்த தீர்மானத்தை வழங்கினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

இதுகுறித்து தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி கூறியதாவது:

‘‘தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தும் ஆளும் கட்சியின் தந்திரம் பலிக்காது. கடுமையான அதிருப்தி ஏற்படும் முன்பாக, எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் முந்திக் கொள்ளலாம் என சந்திரசேகர் ராவ் எண்ணுகிறார்.

ஆனால் மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். சந்திரசேகர் ராவும், தேர்தல் ஆணையமும் இணைந்து மேட்ச் பிக்ஸிங் செய்துள்ளனர். முன்கூட்டியே தேர்தல் நடத்தும் சந்திரசேகர ராவின் முடிவுக்கு தேர்தல் ஆணையமும் உடன்படுகிறது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் சந்திரசேகர் ராவ் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வருகின்றன. முன்கூட்டியே தேர்தல் நடத்தி வீண் செலவு செய்யும் சந்திரசேகர ராவை மக்கள் புறக்கணிப்பார்கள்’’ எனக் கூறினார்.

Label