OUR CLIENTS
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: விசாரணை ஆணையத்துக்கும் மேலும் 6 மாதம் அவகாசம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: விசாரணை ஆணையத்துக்கும் மேலும் 6 மாதம் அவகாசம் Posted on 07-Sep-2018 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: விசாரணை ஆணையத்துக்கும் மேலும் 6 மாதம் அவகாசம்

சென்னை, செப். 7-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில் காவல்துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்தும் கடந்த மே 22-ஆம் தேதிக்குப் பிறகு, தூத்துக்குடியிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடந்த சம்பவங்களையும் சேர்த்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து பொது மக்கள், பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பலரும் கடந்த மே 22-ஆம் தேதி நடந்த சம்பவம் மற்றும் அதற்குப் பின்பு நடந்த நிகழ்வுகள் தொடர்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கருத்துகளைத் தெரிவிக்கலாம். மனுக்கள் மூலமாகவும் ஆணையத்துக்கு அளிக்கலாம். உறுதிமொழிப் பத்திரங்களை (ஒன்று அசல் மற்றும் இரண்டு நகல்கள்) ""அரசு மாளிகை எண். என்.சி.பி.28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28'' என்ற முகவரிக்கோ அல்லது ""அரசு பழைய சுற்றுலா மாளிகை, தெற்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி-628 001'' என்ற முகவரிக்கோ தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த விசாரணை 2 மாத காலத்துக்குள் நிறைவடைந்து, அந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 4-ஆம் தேதி விசாரணையை தொடங்கிய ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Label