OUR CLIENTS
தேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் குவிப்பு - வாகன ஓட்டிகள் கடும் அவதி!
தேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் குவிப்பு - வாகன ஓட்டிகள் கடும் அவதி! Posted on 07-Sep-2018 தேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் குவிப்பு - வாகன ஓட்டிகள் கடும் அவதி!

திருவள்ளூர், செப். 7-

திருவள்ளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் மொத்தம் 1.50 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் உள்ளன. இதில், நெற்பயிர், மக்காச்சோளம், கரும்பு, எள், கேழ்வரகு போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

 இந்நிலையில், கிராமங்களில் அறுவடைச் செய்த கதிர்களை உலர்த்துவதற்கு போதுமான களவசதியில்லாத நிலையுள்ளது. இதனால், விவசாயிகள் தானிய கதிர்களை பிரித்தெடுப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் பரப்பி விடுகின்றனர். இதேபோல், அதிக போக்குவரத்துள்ள திருவள்ளூர்&செங்குன்றம் நெடுஞ்சாலை, பேரம்பாக்கம் மற்றும் கிராம சாலை, திருவள்ளூர்&ஆவடி & பாக்கம் சாலை உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் தானியக் கதிர்களை பரப்பிவிட்டு, சாலையோரத்தில் தூங்கும் செயல்களிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். 

கனரக வாகனங்கள் அதிகம் சென்று வரும் தேசிய நெடுஞ்சாலையில் கதிர்களை பரப்பி, உலர்த்தி, தூற்றும் போது, வாகன ஓட்டிகளின் கண்களில் தூசி விழுந்து அவதிப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. அதேபோல், இருசக்கர வாகனங்களில் வருவோர் தானியங்கள் பரப்பிய சாலையில் செல்லும் போது சறுக்கி விழுந்து விடுவதாகவும் வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதி சங்கரன் கூறியதாவது: வேளாண்மைத் துறை, ஒழுங்கு விற்பனைக் கூடம் மற்றும் வேளாண்மை வணிகம் ஆகிய திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் 100&க்கும் மேற்பட்ட களவசதிகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 

தற்போது இத்திட்டத்தை செயல்படுத்த அரசு நிதி வசதி இல்லாததால் குறைந்த அளவிலேயே களவசதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தானியக் கதிர் பிரித்தெடுக்கும் களமாக தார்ச்சாலையை பயன்படுத்த வேண்டிய நிலையுள்ளது என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வேளாண்மைத் துறை துணை இயக்குநர்(வணிகம்) அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், இம்மாவட்டத்தில் விவசாய சாகுபடி அதிகமாக நடைபெறும் கிராமங்களைத் தேர்வு செய்து, தானிய உலர் களம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல், தேசிய நீர்வள நிலவளத்திட்டம் மூலமும், விவசாய அபிவிருத்தித் திட்டம் மூலமும் 23 கிராமங்களில் உலர் களவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டுக்கு இத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு வரவில்லை என அவர் தெரிவித்தார்.

Label