OUR CLIENTS
குட்கா முறைகேடு - ராயபுரத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சிபிஐ சீல்!
குட்கா முறைகேடு - ராயபுரத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சிபிஐ சீல்! Posted on 07-Sep-2018 குட்கா முறைகேடு - ராயபுரத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சிபிஐ சீல்!

சென்னை, செப். 7-

குட்கா முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் சம்பத்குமார் வீட்டை சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டை சீல் வைத்தனர்.

அண்ணாநகரை சேர்ந்தவர் மாதவராவ். இவர், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை, சென்னை அருகே, செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் மறைத்து வைத்திருந்தார். இவரது வீடு, அலுவலகம், கிடங்கு உள்ளிட்ட பல இடங்களில், 2016-ல், வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு, பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் அடங்கிய டைரி சிக்கியது. இதில் முறையாக விசாரணை நடக்கவில்லை என திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

மாதவ் ராவ் டைரி அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நேற்று சிபிஐ அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் ரெய்டு நடந்தது.

குற்றம் சாட்டப்பட்ட வர்களில் கடந்த 2015&16&ம் ஆண்டில் செங்குன்றத்தில் ஆய்வாளராக இருந்த சம்பத்குமார், உதவி ஆணையர் மன்னர் மன்னன் உள்ளிட்டோரும் அடக்கம்.
சம்பத்குமார் தற்போது பணி மாறுதல் பெற்று தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவர் தங்கி இருக்கும் ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டிலும் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்

சோதனையின்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செங்குன்றத்தில் சம்பத்குமார் பணியாற்றிய போது ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தனக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை இன்றுவரை ஒப்படைக்காமல் பயன்படுத்திவருவது தெரியவந்தது. இதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் ராயபுரம் காவலர் குடியிருப்பில் ‘ஏ’ பிளாக்கில் உள்ள 3&வது மாடியில் அவர் தங்கி இருந்த வீட்டுக்கு நேற்று நள்ளிரவு வந்த சிபிஐ அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர் அந்த வீட்டை பூட்டி அந்த வீட்டின் கதவில் நோட்டீஸ் ஒட்டி ‘சீல்’ வைத்தனர்.

Label