OUR CLIENTS
உ.பி.யில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட ஐ.பி.எஸ்.
உ.பி.யில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட ஐ.பி.எஸ். Posted on 09-Sep-2018 உ.பி.யில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட ஐ.பி.எஸ்.

லக்னோ, செப். 9-
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கான்பூர் நகர போலீஸ் சூப்பிரண்ட் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கான்பூர் நகர போலீஸ் சூப்பிரண்ட்டாக பணியாற்றி வந்தவர் சுரேந்திர குமார் தாஸ்(30). ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் விஷம் குடித்த நிலையில் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அம்மாநில போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங் நேற்று மருத்துவமனைக்கு வந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். சுரேந்திர குமாரின் பல உடல் உறுப்புகள் சரியாக செயல்படாத நிலை உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Label