OUR CLIENTS
வெல்கம் பவுண்டேஷன் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா!
வெல்கம் பவுண்டேஷன் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா! Posted on 10-Sep-2018 வெல்கம் பவுண்டேஷன் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா!

பூவிருந்தவல்லி, செப். 10-

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த அம்பத்தூரில் காலச்சக்கரம் நிருபர்கள் நடத்திய மாபெரும் மட்டை பந்து போட்டி (கிரிக்கெட்) போட்டியில் எட்டு அணிகள் கலந்து கொண்டன. இரண்டு நாட்களாக போட்டி நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு அணிகளுக்கு பரிசுகள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசு பெற்ற சிங்கம் சி சி அணிக்கு ரூபாய் 25,000த்தை பத்திரிக்கை நிருபர்களின் காவலன் காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனரும், வெல்கம் பவுண்டேஷன் மற்றும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின்   தேசிய தலைவருமான கா.குமார் அவர்களின் உத்தரவின் படி, ரூபாய் 25,000ம்  முதல் பரிசினை காலச்சக்கரம் இன்வெஸ்டிகேஷன் நிருபர் ரமேஷ், பிரேம்குமார், உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தாஸ் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். கோப்பையை முன்னாள் அம்பத்தூர் சேர்மன் ஜோசப் சாமுவேல் வழங்கினார். இரண்டாம் இடத்தை பிடித்த திருமுல்லைவாயல் ஜெய் பீம் நரேஷ் அணிக்கு ரூபாய் 15,000 பரிசு வழங்கப்பட்டது. இதில் நரேஷ் மணிபாலன் மற்றும் உதயகுமார், இளங்கோ, இன்பராஜ் பலர் கலந்து கொண்டனர்.

Label