OUR CLIENTS
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் உள்ளார்: இந்தியாவின் ஆதாரங்களை உறுதி செய்தது ஐநா
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் உள்ளார்: இந்தியாவின் ஆதாரங்களை உறுதி செய்தது ஐநா Posted on 24-Aug-2016 தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் உள்ளார்: இந்தியாவின் ஆதாரங்களை உறுதி செய்தது ஐநா

நியூயார்க்:
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் 257 பேர் பலியானார்கள், 700 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவராக குற்றம் சட்டப்பட்ட தாவூத் இப்ராகிமை இந்தியா கடந்த 20 வருடங்களாக தேடி வருகின்றது.


தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகின்றது. இதற்கு பாகிஸ்தான் மறுப்பும் தெரிவித்து வருகின்றது.

பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் வசித்துவரும் தாவூத் இப்ராகிம் தொடர்ந்து முகவரிகளை மாற்றி வருவதாகவும் கூறியிருந்த இந்தியா, இதுதொடர்பாக ஒன்பது முகவரி ஆதாரங்கள் அடங்கிய ஆவணத்தை ஐநா சபைக்கு வழங்கியிருந்தது.

இந்நிலையில், இந்த ஆதாரங்களை ஆராய்ந்த ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் கமிட்டி, தாவூத் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக இந்தியா அளித்த ஒன்பது முகவரி ஆதாரங்களில், ஆறு முகவரிகள் சரியானவை என்று உறுதி செய்துள்ளது.

Label