OUR CLIENTS
அதிமுகவில் தன்னை யாரும் மதிக்கவில்லையாம் முகாரி ராகம் பாடுகிறார் எம்எல்ஏ லோகநாதன்!
அதிமுகவில் தன்னை யாரும் மதிக்கவில்லையாம் முகாரி ராகம் பாடுகிறார் எம்எல்ஏ லோகநாதன்! Posted on 10-Sep-2018 அதிமுகவில் தன்னை யாரும் மதிக்கவில்லையாம் முகாரி ராகம் பாடுகிறார் எம்எல்ஏ லோகநாதன்!

வேலூர், செப். 10-

அதிமுகவில் தன்னை யாரும் மதிக்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த கே.வி.குப்பம் எல்எல்ஏ செஞ்சி ஜி.லோகநாதன் முகாரி ராகம் பாடத் தொடங்கியுள்ளார். 

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் செஞ்சி ஜி.லோகநாதன் அதிமுகவில் தன்னை யாரும் மதிக்கவில்லை என்பதால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடும் விரக்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில் முகாரி ராகம் பாட ஆரம்பித்துள்ளார். அதாவது இதற்கு அடிப்படை காரணம் தன்னை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக ஆக்கும்படி எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரினார். ஆனால் அதற்குள்ளாக சட்டத்துறை அமைச்சர் விழுப்புரம் சி.வி.சண்முகம் தயவால் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பு பெற்றார். இதனால் உள்ளூர் அமைச்சர் கே.சி.வீரமணி கோபத்தின் உச்சத்துக்கு சென்றார்.

 இதற்கிடையே கே.வி.குப்பம் தொகுதியை உள்ளடக்கியுள்ள கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் பதவியையாவது தனக்கு கொடுக்குமாறு செஞ்சி ஜி.லோகநாதன் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏவை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ரவியோ தன்னால் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏயாவாக உள்ள தாங்கள் ஒன்றிய செயலாளர் பதவியை கேட்பது நியாயமா? என்று கேட்டதுடன் தற்போது ஒன்றிய செயலாளராக உள்ள செட்டியார் வகுப்பைச் சேர்ந்த கே.எம்.ஐ.சீனுவாசனை பதவி நீக்கம் செய்ய இயலாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். கே.எம்.ஐ.சீனுவாசன் வாணிய செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரும் அவருடன் சேர்ந்து 10 வீடுகள் மட்டுமே செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த தனக்கு கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் பதவி தருவதுதான் சாலச்சிறந்ததாக இருக்கும் என்று மார்தட்டியுள்ளார் லோகநாதன் எம்எல்ஏ. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சற்று பொருத்து கொள்ளுங்கள். நான் விரைவில் சரி செய்து தருகிறேன் என்று லோகநாதனை சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் கே.சி.வீரமணியோ கடும் கோபத்தில் உள்ளார். இதற்கு பின்னணியில் அண்மையில் வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு வந்த அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பார்ச்சூன் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது ரகசியமாக செஞ்சி ஜி.லோகநாதன் டி.டி.வி.தினகரனை சந்தித்து தான் அமமுகவில் இணைந்து கொள்வதாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல்களை சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவர் ஏன் ஒன்றிய செயலாளர் பதவியாவது கிடைக்கட்டும் என்று அலைவதற்கு காரணமே தேர்தல் வந்தால் நமக்கு பணம் கிடைக்கும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்  ன்கின்றனர் தொகுதி மக்கள். தொகுதி மக்களை திரும்பி பார்ப்பதே இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒப்பந்ததாரர்களை சரிகட்டுவது, திமுக, பாமகவினருடன் கைகோர்த்து செயல்படுவது, தனக்கு வேண்டிய கோபி, மோகன் ஆகிய பினாமிகளுக்கு பதவிகளை வாங்கி கொடுத்தது போன்ற விரும்பத்தகாத பணிகளை மட்டுமே செஞ்சி ஜி.லோகநாதன் செய்து வருகிறார். தனக்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் பதவிகள் கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார். 

ஆற்காடு ராதிகா செஞ்சி லோகநாதன் டிடிவி தினகரனை சந்தித்து பேசிவிட்டு வந்ததை ஆதாரங்களுடன் அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒன்றிய துணை செயலாளர் தேவியும் புகார் அளித்துள்ளார். இப்படி நாளுக்கு நாள் நெருக்கடி லோகநாதனுக்கு முற்றி வருகிறது. தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார் லோகநாதன். அமைச்சர் வீரமணி, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி என்று ஒருவர் விடாமல் பகைமை பாராட்டி வருகிறார் இந்த பலேஆசாமி லோகநாதன். இவர் எந்த பதவியும் கிடைக்காமல் முகாரி ராகம் பாட ஆரம்பித்து விட்டார். அதிமுக தலைமை இவர் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.

Label