OUR CLIENTS
மலையடிவாரத்தில் பதுக்கிய விஷ சாராயம் பறிமுதல்!
மலையடிவாரத்தில் பதுக்கிய விஷ சாராயம் பறிமுதல்! Posted on 10-Sep-2018 மலையடிவாரத்தில் பதுக்கிய விஷ சாராயம் பறிமுதல்!

செஞ்சி, செப். 10-

செஞ்சி அருகே நேற்று அதிகாலை மலையடிவாரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான விஷ சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அவலூர்பேட்டை பகுதியில் அதிகளவில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 2 மணிக்கு செஞ்சி அடுத்த அவலூர்பேட்டையில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்பகுதியில் உள்ள மலையடிவாரம் அருகே சின்னப்பன் என்பவர் நிலத்தில் சாராய கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 387 கேன்களில், 13,545 லிட்டர் விஷ சாராயம் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 40 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து செஞ்சி கலால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ரேணுகா, சப்&இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாராய கேன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சாராய வியாபாரிகளான களையூரை சேர்ந்த ராமச்சந்திரன், அவலூர்பேட்டையை சேர்ந்த கணேசன், லோகநாதன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சாராயத்தை கடத்தி வந்து, பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த செஞ்சி கலால் போலீசார் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Label