OUR CLIENTS
தமிழக பா.ஜ.க.வுக்கு பாராட்டு தெரிவித்த அமித்ஷா
தமிழக பா.ஜ.க.வுக்கு பாராட்டு தெரிவித்த அமித்ஷா Posted on 10-Sep-2018 தமிழக பா.ஜ.க.வுக்கு பாராட்டு தெரிவித்த அமித்ஷா

புதுடெல்லி, செப். 10-
பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழக பா.ஜ.க.வின் பணியை கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பாராட்டி பேசினார்.

டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேசும்போது, கேரள வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து கருத்து தெரிவித்ததுடன் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிப் பணிகளை பாராட்டியும் பேசினார். குறிப்பாக, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய தமிழக பா.ஜ.க.வின் பணியை அவர் பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து, செயற்குழு தீர்மானங்களை ஆதரித்து பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் பேசினார். அப்போது, மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், மதுரை மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்டு வரும் ‘தாமரை சேவகன்’ நிகழ்ச்சியை பாராட்டி பேசிய அவர், தமிழகம் முழுவதும் இப்பணி விரைவில் தொடர உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

Label