OUR CLIENTS
பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் Posted on 11-Sep-2018 பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

சேலம், செப். 11-
பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செயதியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். வரியை மத்திய அரசுதான் உயர்த்திக்கொண்டே செல்கிறது.

மேகதாது விஷயத்தில் தமிழக அரசின் முடிவு தெளிவாக உள்ளது. மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது. அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. தமிழக அரசின் எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் வரவில்லை. குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது.  ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Label