OUR CLIENTS
வேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் புத்தம் புது பொலிவுடன் நாளை ஆரம்பம்!
வேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் புத்தம் புது பொலிவுடன் நாளை ஆரம்பம்! Posted on 11-Sep-2018 வேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் புத்தம் புது பொலிவுடன் நாளை ஆரம்பம்!

வேலூர், செப். 11-

வேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் புத்தம் புது பொலிவுடன் நாளை (12ம் தேதி) குதூகலமாக ஆரம்பமாகிறது.

வேலூர் லாங்கு பஜாரில் கதவு எண்: 59ல் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமானது கடந்த 23 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 23 ஆண்டுகளாக தொடக்க விழாவை முன்னிட்டு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு மிகப் பிரமாண்டமான ஜவுளி ஷோரூமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வேலூர் வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை பெற்ற பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமானது ஆறடி நுழைவு வாயிலில் ஆடைகளின் அரண்மனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையிலும், தரமான ஜவுளி ரகங்களை கடல் போல் கொண்டு வந்து குவித்துள்ளது பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம். நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள விழாவில் ஆன்மிக பெரியோர்களான ஸ்ரீசக்தி அம்மா, ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், மௌனகுரு சச்சிதானந்த சுவாமிகள், மகாதேவமலை சித்தர், வாலாஜா தன்வந்திரி பீட முரளீதர சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள் ஆன்மிக பெரியோர்கள் நல்லாசியுடனும், பிரபல திரைப்பட நட்சத்திரங்களான கங்கைஅமரன், நடிகர் சதீஷ், பின்னணி பாடகர் வேல்முருகன், சஞ்ஜீவ், ஆலியா மானஸா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் வாடிக்கையாளர்களுடன் கலந்து கொண்டு கொண்டாட வருகை தருகிறார்கள். 

வாடிக்கையாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து நல்லாதரவு தருமாறு பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்.டி.சுரேஷ் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் சேவையில் தொடர்ந்து தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் மேலும் புதுப்பிக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான ஜவுளி ஷோரூமுக்கு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் வகை வகையான ஜவுளி ரகங்களை மலைபோல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாருங்கள், மனநிறைவுடன் ஜவுளி ரகங்களை அள்ளிச் செல்லுங்கள் வாடிக்கையாளர்களே. 

Label