OUR CLIENTS
தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி சவால்
தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி சவால் Posted on 11-Sep-2018 தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி சவால்

சென்னை, செப். 11-
என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டெல்லியில் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டில்லியில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், உள்ளாட்சித் துறையின் விதிகளை மீறி யாருக்கும் டெண்டர் அளிக்கப்படவில்லை. அமைச்சர் பதவியை பயன்படுத்தி எந்த தவறையும் செய்யவில்லை. என் மீது திமுக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார். அரசியலை விட்டும் விலகத் தயார்.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவிகளில் இருந்து ஸ்டாலின் விலக தயாரா?  திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என ஸ்டாலினுக்கு  சவால் விடுத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முதல்வர், துணை முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. வளர்ச்சியடைந்துவரும்  அதிமுகவை முடக்க ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் பலிக்காது. 

திமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை இருந்ததைவிட 3 மடங்கு உள்ளாட்சியை உயர்த்தியுள்ளேன். தமிழக உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு விருது வழங்கி பாராட்டுகிறது என்பதை ஸ்டாலின் உணர வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

Label