OUR CLIENTS
கிராமப்புற வேலை காப்புறுதித் திட்டம் - சிறப்பாக அமல்செய்த தமிழக அரசுக்கு 3 விருதுகள்
கிராமப்புற வேலை காப்புறுதித் திட்டம் - சிறப்பாக அமல்செய்த தமிழக அரசுக்கு 3 விருதுகள் Posted on 11-Sep-2018 கிராமப்புற வேலை காப்புறுதித் திட்டம் - சிறப்பாக அமல்செய்த தமிழக அரசுக்கு 3 விருதுகள்

புதுடெல்லி, செப். 11-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை காப்புறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மூன்று தேசிய விருதுகளை மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சக நரேந்திர சிங் டோமர் அவர்களிடமிருந்து தமிழ்நாடு சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெற்றுக்கொண்டார்.

தேசிய அளவிலான மூன்று மாநில விருதுகளை தமிழ்நாடு பெற்றது அவற்றின் விவரம்:
1) தமிழ்நாட்டில் 2017-18ஆம் நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 58 இலட்சம் பணியாளர்களுக்கு 23.89 கோடி மனித சக்தி நாட்களுக்கு ரூ.5,344 கோடி ஊதியம் வழங்கியதற்கும், தமிழக அரசால் வடிவமைக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறையை (Standard Operating System) பின்பற்றி 15 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் 99.18ரூ எட்டியுள்ளமைக்கும், நிதி மாற்று ஆணையை விடுவிப்பதிலும், குறித்த காலத்திற்குள் ஊதியம் வழங்குதல் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஊதியத்திற்கு இழப்பீடு வழங்குவதில் சிறந்த செயல்பாட்டிற்கும் தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதினை தமிழக அரசு பெற்றது.

2) 2017-18ஆம் நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 16,89,480 சொத்துக்களில் 16,83,863 சொத்துக்கள் அதாவது 97.89ரூ புவிக்குறியீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் அதிகமாக புவிக்குறியீடு செய்த சாதனைக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்படும் சொத்துகளுக்கு புவி குறியீடுதலில் சிறந்த முயற்சிகளுக்கு தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும் தமிழக அரசு பெற்றது.

3) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2017-18ஆம் நிதி ஆண்டில் 85,64,587 தொழிலாளர்களில், 84,99,273 தொழிலாளர்களின் ஆதார் எண்கள் (99.23%) வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் ஆதாருடன் இணைந்த ஊதியம் செலுத்தும் முறை (Aadhaar Based Payment System) மற்றும் ஊதியம் ஈடுசெய்யப்படும் முறையில் ஊதியம் செலுத்துதலில் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் இரண்டாம் இடத்திற்கான விருதும் (Performance in Aadhaar Seeding and Conversion) நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாவட்ட அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்ட 18 மாவட்டங்களில், தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும்  தஞ்சாவூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு  தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு, 2016-17 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறந்த செயல்படுத்தியமைக்காக, வழங்கப்பட்ட விருதை  தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர்,  ஆ.அண்ணாதுரை, மற்றும் திட்ட இயக்குநர், ப.மந்திராசலம்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, (தஞ்சாவூர் மாவட்டம்) ஆகியோர் பெற்று கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 2016-17 ஆம் ஆண்டில் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் சிறப்பு முயற்சியாக தடுப்பணை கட்டுதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மீள் நிரப்புத் தண்டு அமைத்தல் போன்ற இயற்கை வள மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டதற்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக  பிரஷாந்த் மு. வடநேரே,   மாவட்ட ஆட்சியர், கன்னியாகுமரி (முன்னாள் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை) மற்றும் திருமதி.க.லோகநாயகி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஆகியோர் இந்த தேசிய விருதுகள் பெற்றுக் கொண்டனர்.

மத்திய அரசின், கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ், குறிப்பிட்ட 7 முக்கிய திட்டங்களில் தன்னிறைவு எய்தி சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, மாவட்டங்களுக்கான தேசிய விருது  தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை, தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் அதன் ஆட்சியர்  நந்திப் நந்தூரி  மற்றும் எஸ்.எஸ்.தனபதி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி  ஆகியோர் பெற்று கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் இணை அமைச்சர் ராம் கிர்பால் யாதவ், பல்வேறு மாநிலங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமர்ஜீத் சின்ஹா, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கா.பாஸ்கரன் கூடுதல் இயக்குநர் (MGNREGS) திருமதி. க. முத்துமினாள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Label