OUR CLIENTS
அமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்!
அமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்! Posted on 12-Sep-2018 அமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்!

சிவகங்கை, செப். 12-

சிவகங்கையில் அமைச்சரை பகைத்து கொண்டதால் மாவட்ட ஆட்சியராக இருந்த லதா அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் லதா. வராமல் இருந்த பயிர் காப்பீட்டுத் தொகையைப் பெற நடவடிக்கை எடுத்ததால் விவசாயிகளிடம் நன்மதிப்பைப் பெற்றார். அதே நேரம், தெ.புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி செயல்படக் கூடாது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது நான் இந்த குவாரியை நடத்தவில்லையென்றால் இந்தப் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்று என்னைச் சொல்லிவிடுவார்கள்.

இதைச் செயல்பட விடுங்கள் என்று விவசாயிகளிடம் பேசி அரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார். அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் அமைச்சர்  பாஸ்கரன், எம்பி செந்தில்நாதன் போன்ற ஆளுங்கட்சியினர் தலையீட்டை எதிர்த்து அங்கன்வாடி சங்க நிர்வாகிகளிடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டார். இதனால் அமைச்சர் தரப்பை ஆத்திரப்படுத்தி லதாவின் மாற்றத்துக்கு வழி ஏற்படுத்தியது என்கின்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள். நேர்மையான அதிகாரிகளுக்கு கிடைப்பது என்னவோ பணியிடமாற்றம் மட்டும்தான்.

 ஆனால் ஜால்ரா போடும் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து அதே மாவட்டத்தில் குப்பை கொட்டி வருகின்றனர். துதிபாடிகளுக்கு பணியாற்றுவதை விட சுதந்திரமாக நடந்து கொள்வதே எவ்வளவோ மேல் என்று பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களும் உள்ளனர் என்பதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் ஜெ.ஜெயகாந்தன், வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் ராமன் போன்றோரை உதாரணமாக கூறலாம். கன்னியாகுமரியில் உள்ள பிரசாந்த் மு.வடநேரே போன்றோர் மாவட்ட ஆட்சியராக கிடைக்கப் பெற்றால் மட்டுமே மாவட்டம் வளர்ச்சி பெறும் என்கின்றனர் விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள். இதே போன்று தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் அமைய வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Label