OUR CLIENTS
நல்ல தரமான துணி ரகங்கள் வேண்டுவோர் தவறாமல் நாடுவது பிரியா டெக்ஸ்டைல்ஸ்!- புத்தம் புது பொலிவுடன் இன்று குதூகல ஆரம்பம்!
நல்ல தரமான துணி ரகங்கள் வேண்டுவோர் தவறாமல் நாடுவது பிரியா டெக்ஸ்டைல்ஸ்!- புத்தம் புது பொலிவுடன் இன்று குதூகல ஆரம்பம்! Posted on 12-Sep-2018 நல்ல தரமான துணி ரகங்கள் வேண்டுவோர் தவறாமல் நாடுவது பிரியா டெக்ஸ்டைல்ஸ்!- புத்தம் புது பொலிவுடன் இன்று குதூகல ஆரம்பம்!

வேலூர், செப். 12-

வேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் புத்தம் புது பொலிவுடன் இன்று (12ம் தேதி) குதூகலமாக ஆரம்பமாகிறது. நல்ல தரமான துணி ரகங்கள் வேண்டுவோர் தவறாமல் நாடுவது வேலூ பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தைதான் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.

வேலூர் லாங்கு பஜாரில் கதவு எண்: 59ல் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமானது கடந்த 23 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்புடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டு வருகிறது. கடந்த 23 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமானது நேர்மை, நம்பிக்கை, நாணயம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி நடந்து வந்துள்ளது. வாடிக்கையாளர்களே தெய்வம் என்ற நோக்கில் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமானது தங்கள் துணிக்கடைக்கு (ஜவுளிகடல்) வருகை தரும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் உபசரிப்பதுடன் மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் கேட்கும் துணிரகங்களை குழந்தைகள், இல்லத்தரசிகள், முதியோர், இளைஞர்கள், இளம்பெண்கள் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் முகம் கோணாமல், சளைக்காமல் காண்பித்து அவர்களை திருப்திபடுத்துவதை அன்று முதல் இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் இந்த பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமானது மென்மேலும் வளர்ந்து குடியாத்தத்தில் கிளை நிறுவனம் ஒன்றும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக குடியாத்தம் நகர மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி வாடிக்கையாளர் சேவையில் பிரியா டெக்ஸ்டைல்ஸை மிஞ்சுவதற்கு வேலூரில் ஒரு ஜவுளி நிறுவனமும் இல்லை என்றே சொல்லலாம். 

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் மனதுக்கு திருப்தி ஏற்படும் வகையில் நடந்து கொள்வதை இந்த நிறுவனம் தொடர்ந்து பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கடையின் உரிமையாளர் சுரேஷ் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் என்று  இங்கு குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும். ஒரு நிறுவனத்தை எப்படி வளர்ப்பது என்பதை  பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷிடம் கற்றுக் கொள்ள வேண்டும். கனிவான பேச்சு, அன்பான உபசரிப்பு  மட்டுமே  வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் வரச்சொல்லும் தாரக மந்திரமாகும். இதை இடைவிடாமல் அவரும்,  பிரியா டெக்ஸ்டைல்ஸ் ஊழியர்களும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர் . 

உண்மையும், உழைப்பும் உயர்வதற்கு வழிகளாகும். இதை பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் பின்பற்றி வருகிறது. வேலூரில் இவ்வளவு ஜவுளி நிறுவனங்கள் (கார்ப்பரேட்)கால் பதித்தாலும் இதுநாள் வரையில் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை மிஞ்ச யாராலும் முடியவில்லை என்றே சொல்லலாம். தனக்கென ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தை பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் தக்க வைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வேறெங்கும் இல்லாத தரமான துணி ரகங்களை மில்லில் இருந்து நேரடியாக கொண்டு வந்து விற்பனைக்கு வைத்துள்ளனர். தரமோ உயர்வு, விலையோ குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். வாடிக்கையாளர்கள் திருப்திக்காகவே இந்த கடை விரிவுபடுத்தப்பட்டு புதுப்பொலிவு பெறச் செய்துள்ளனர். 

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தொடக்க விழாவை முன்னிட்டு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு மிகப் பிரமாண்டமான ஜவுளி ஷோரூமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வேலூர் வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை பெற்ற பிரியா டெக்ஸ் டைல்ஸ் நிறுவனமானது ஆறடி நுழைவு வாயிலில் ஆடைகளின் அரண்மனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதுப்புது ஜவுளி ரகங்கள் காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையிலும், தரமான ஜவுளி ரகங்களை கடல் போல் கொண்டு வந்து குவித்துள்ளது பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம். இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள விழாவில் ஆன்மிக பெரியோர்களான ஸ்ரீசக்தி அம்மா, ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், மௌனகுரு சச்சிதானந்த சுவாமிகள், மகாதேவமலை சித்தர், வாலாஜா தன்வந்திரி பீட முரளீதர சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மிக பெரியோர்கள் நல்லாசியுடனும், பிரபல திரைப்பட நட்சத்திரங்களான கங்கை அமரன், நடிகர் சதீஷ், திரைப்பட பின்னணி பாடகர் விருத்தாசலம் முதனை வேல்முருகன், சின்னத்திரை நட்சத்திர பட்டாளம் வாடிக்கையாளர்களுடன் கலந்து கொண்டு கொண்டாட வருகை தருகிறார்கள். 

வாடிக்கையாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து நல்லாதரவு தருமாறு பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்.டி.சுரேஷ் அன்போடும், பண்போடும் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் சேவையில் தொடர்ந்து தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் மேலும் புதுப்பிக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான ஜவுளி ஷோரூமுக்கு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் வகை வகையான ஜவுளி ரகங்களை மலைபோல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாருங்கள், மனநிறைவுடன் ஜவுளி ரகங்களை அள்ளிச் செல்லுங்கள் வாடிக்கையாளர்களே. 

Label