OUR CLIENTS
பூம்புகார் விற்பனைக் கூடத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி
பூம்புகார் விற்பனைக் கூடத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி Posted on 12-Sep-2018 பூம்புகார் விற்பனைக் கூடத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி

செங்கல்பட்டு,  செப். 12-

மாமல்லபுரத்தில் உள்ள பூம்புகார் கைவினைப் பொருள் விற்பனைக் கூடத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

 மாமல்லபுரம் கடற்கரைச் சாலையில் உள்ள இந்த விற்பனைக் கூடத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார் சிலைகள் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு அடி முதல் சுமார் 3, 5, 7 அடி வரையிலான பல்வேறு வடிவ விநாயகர் சிலைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.  கண்காட்சியை பொதுமக்களும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பார்வையிட்டு, விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகளை சென்னை விற்பனை மேலாளர் மதியரசு, மாமல்லபுரம் விற்பனைக் கூடத்தில் பணியாற்றும் வேலு உள்ளிட்ட ஊழியர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

Label