OUR CLIENTS
மகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக!
மகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக! Posted on 14-Sep-2018 மகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக!

வேலூர், செப். 14-

வேலூர் மாவட்டம், மகாதேவமலையில் உள்ள விபூதி சித்தர் என்று அழைக்கப்படும் மகானந்த சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக. அவரின்றி அணுவும் அசையாது என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் சமாதி அரசியல் ஒரு டிராக்கில் சென்று கொண்டிருக்கிறது. இதை பொதுமக்களும் அரசியல்வாதிகளும் நன்கு அறிவார்கள். ஒருபுறம் பார்த்தால் சித்தர்கள் டிராக்கில் பயணித்து கொண்டிருக்கின்றார் அமமுக டிடிவி.தினகரன். இவர் ஏற்கனவே திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்வதும், அங்குள்ள மூக்குப்பொடி சித்தரை சந்தித்து விட்டுதான் செல்கிறார். இந்நிலையில் தொடர்ந்து தரிசித்ததால் மூக்குப்பொடி சித்தரின் பக்தராகவே மாறிவிட்டார். திருவண்ணமலையைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் இவரது பார்வை விழத் தொடங்கியுள்ளது.

அதாவது வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உள்ள மகாதேவமலைக்கு டிடிவி.தினகரன் அடிக்கடி வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. வேலூர் வழியாகச் செல்லும் போதெல்லாம் மகாதேவமலையில் உள்ள விபூதி சித்தர் என்று அழைக்கப்படும் மகானந்த சித்தரின் தீவிர பக்தராகவே ஆகிவிட்டார் டிடிவி.தினகரன். அண்மையில் வேலூர் மாங்காய் மண்டி திடலில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்துக்கு டிடிவி.தினகரன் வருகை தந்தபோது கூட கிடைத்த நேரத்தில் மகாதேவமலைக்குச் சென்று மகானந்த சித்தரை சந்தித்துவிட்டு ஆசி பெற்று வந்துள்ளார். இதற்கிடையே டிடிவி.தினகரன் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டு வாகனங்களை கோயம்புத்தூரில் வாங்கியுள்ளார். அவற்றில் ஒரு வாகனத்தை சென்னைக்கு கொண்டு சென்றார். அப்போது அந்த வாகனத்தை விபூதி சித்தரிடம் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளனர். இந்த வாகனத்தை சேலஞ்சர் துரை தலைமையிலான அமமுகவினர் கொண்டு சென்றுள்ளனர். விபூதி சித்தரை அந்த வாகனத்தில் ஏற்றி சென்டிமெண்டாக ஒரு சுற்றும் சுற்றி வந்து அவரை இறக்கி விட்டுள்ளனர். தினகரன் பொடி வைத்து பேசுவது இதனால்தானா?. ஆக மொத்தம் டிடிவி.தினகரன் ஆன்மிக அரசியல் நடத்துகிறாரா? என அரசியல் நோக்கர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது போன்று ஆன்மிக அரசியல் பின்னணியில் டிடிவி. தினகரனும் சேர்ந்துவிட்டாரா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆக மொத்தம் ஆன்மிக அரசியலில் டிடிவி.தினகரன் ஈர்க்கப்பட்டுள்ளாரா என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுதான் தேர்தலில் வெற்றிக்கு பின்னணியில் உள்ள சிதம்பர ரகசியமா என்பது பரம ரகசியமாக உள்ளது. ஆன்மிக அரசியலுக்கு விரைவில் விடை தெரிவிப்பாரா டிடிவி.தினகரன் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label