OUR CLIENTS
எஸ்.பி., அலுவலகத்தில் கழிப்பிட வசதி இல்லை வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்தும் அவலம்!
எஸ்.பி., அலுவலகத்தில் கழிப்பிட வசதி இல்லை வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்தும் அவலம்! Posted on 14-Sep-2018 எஸ்.பி., அலுவலகத்தில் கழிப்பிட வசதி இல்லை வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்தும் அவலம்!

சிவகங்கை, செப். 15-

சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் போலீஸ் எஸ்.பி., அலுவலகம் உள்ளது. இங்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்கள் எஸ்.பி., தனிப்பிரிவிற்கு நேரடியாக புகார் மனுக்கொடுக்கலாம் என்பதால், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். இவர்கள் மனுக்களை கொடுத்தவுடன் வரிசையாக அமர வைக்கப்பட்டு, எஸ்.பி., நேரில் சந்திக்க அழைத்து செல்லப்படுவர். வாரத்தில் 3 நாட்கள் காலை 10:00 முதல் 2:00 மணி வரை மனுக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மனுக்கொடுத்தவர்கள் வெளியே வந்ததும் கழிப்பறை வசதியில்லாததால், எஸ்.பி., அலுவலகத்திற்கு எதிரே உள்ள மரங்களுக்கு பின்புறத்தை பயன்படுத்துகின்றனர்.
எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெறும் மாதாந்திர ‘கிரைம் மீட்டிங்’கிற்கு வரும் போலீசார் எதிரே கார், டூவீலர்கள் நிறுத்தும் இடங்களுக்கு பின்புறத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இரண்டாவது மாடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் உள்ளன. இவற்றை பெரும்பாலானவர்கள் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். 

அதிகமானவர்கள் பயன்படுத்திய பிற்கு சுத்தம் செய்பவர் மறுநாள் தான் வருவார். அப்போது துர்நாற்றம் பக்கத்து அறைகளுக்கும் பரவி விடும். மத்திய அரசு கழிப்பிடங்கள் கட்டுவதற்கு மானிய நிதியுதவி அளித்து வருகிறது. ஆனால், எஸ்.பி., அலுவலகம் வரும் பொதுமக்கள் கழிப்பறை வசதியில்லாமல் திறந்த வெளியை தான் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்காக எஸ்.பி., அலுவலகம் அருகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே இலவச கழிப்பறைகள் கட்ட வேண்டும்.

Label