OUR CLIENTS
பேட்டிங்கை வலுவாக்கிவிட்டு ஆஸி.க்கு வாங்க, இல்லாவிட்டால்தண்டனை கிடைக்கும்- இயான் சேப்பல் எச்சரிக்கை
பேட்டிங்கை வலுவாக்கிவிட்டு ஆஸி.க்கு வாங்க, இல்லாவிட்டால்தண்டனை கிடைக்கும்- இயான் சேப்பல் எச்சரிக்கை Posted on 16-Sep-2018 பேட்டிங்கை வலுவாக்கிவிட்டு ஆஸி.க்கு வாங்க, இல்லாவிட்டால்தண்டனை கிடைக்கும்- இயான் சேப்பல் எச்சரிக்கை

சிட்னி, செப். 16-

இந்திய அணி பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை சரி செய்துவிட்டு ஆஸ்திரேலிய பயணத்துக்கு வாருங்கள். இல்லாவிட்டால் எங்கள் நாட்டு அணியினர் உங்களைத் தண்டித்துவிடுவார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்தது.

இந்நிலையில், அடுத்ததாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 4 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி 2019-ஜனவரி 18-ம் தேதி வரை நடக்கிறது.

ஆஸ்திரேலியத் தொடர் இந்திய அணிக்கு எளிதாக இருக்காது, கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஎஸ்பிஎன்கிரிக்இன்போ.காம் தளத்தில் சேப்பல் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்திய அணி பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை களைவது மிகவும் அவசியமான ஒன்றாகும். பேட்டிங்கில் வலுவாக இருந்தால் மட்டுமே இந்திய அணி ஆஸ்திரேலிய பயணத்துக்கு துணிச்சலுடன் வர முடியும். ஏனென்றால், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு எதிரணியை மிரளச் செய்யும் அளவுக்கு வலுவாக இருக்கிறது.

 இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இழந்து மதிப்பை இழந்துள்ளது. இதை மீட்டெடுக்க ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு விளையாட நினைத்திருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய பயணம் எளிதானதாக இருக்காது.

ஆஸ்திரேலிய அணியில் வலிமையான இரு பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் சஸ்பெண்ட் காரணமாக இல்லாமல் இருப்பதால், வலுகுறைந்திருக்கலாம். ஆனால், பந்துவீச்சு முன்எப்போதும் இல்லாத வலிமையுடன் திகழ்கிறது.

மிட்ஷெல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், பாட்ரிக் கம்மின்ஸ், சிடில் ஆகியோர் உடல்ரீதியாகத் தகுதிபெற்றுவிட்டால், இந்திய அணிக்கு மிகவும் வேதனையாகவும், சவால்நிறைந்த தொடராகஅமைந்துவிடும்.

இங்கிலாந்தில் கேப்டன் விராட் கோலி தவிர்த்து மற்ற வீரர்களுக்கு அந்நாட்டு வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் சிரமமாகஇருந்தது. காற்றில் ஸ்விங் ஆகும் பந்துகள் தரையில் பட்டவுடன் வேறுவிதமாகத் திரும்பும். இதேபோன்றுதான்ஆஸ்திரேலியாவில் இருக்கும், ஆனால், சிறிது பவுன்ஸர் அதிகமாக இருக்கும்.

கடந்த 2014-15-ம் ஆண்டில் இந்திய அணி 2-0 என்று டெஸ்ட் தொடரை இழந்து வந்தது நினைவிருக்கும். இந்திய அணியில் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து விளையாடுவார் என்று நம்புகிறேன். அவரின் தீர்க்கமான ஷாட்கள், பேட்டை நகர்த்தி ஆடும் விதம், பவுண்ஸர்களை கையாளும் விதம் ஆகியவை ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்ள வைத்துவிடும்.

ஆனால், சிறந்த வீரரான ரோகித் சர்மாவை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யாதது வருத்தமானது. இங்கிலாந்து தொடரைப் போன்று ஆஸ்திரேலியத் தொடர் மிகுந்த சவாலாக இருக்கும் என்பதால், ரோகித் சர்மா இழந்த வாய்ப்பை அவருக்குக் கொடுக்கலாம்.

அதிலும் இங்கிலாந்தில் சவுத்தாம்டன் நகரில் நடந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்தை கையாண்டு பேட் செய்த விதம் மோசமாக இருந்தது. மொயின் அலியின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததன் மூலம் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது.

சட்டீஸ்வர் புஜாரா மட்டுமே ஆப்-ஸ்பின்னை சமாளித்து ஆடும் கலையை கற்றிருந்தார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சைத் தவிர்த்துவிட்டு அணியின் செயல்பாட்டைப் பார்த்தால், இந்திய அணி வாய்ப்புகளை வீணடித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

ஆஸ்திரேலிய அணியின் திறமையை குறைத்துமதிப்பிட்டு இந்திய அணி ஆஸ்திரேலியத் தொடரை எதிர்கொண்டால், எங்கள் அணிகொடுக்கும் தண்டனையை இந்தியா ஏற்கவேண்டியது இருக்கும்

இவ்வாறு இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

Label