OUR CLIENTS
புறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்
புறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள் Posted on 17-Sep-2018 புறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்

சென்னை, செப்.17-

புறநகரில் உள்ள ஊராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறையால்  துப்புரவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளான திருவஞ்சேரி, மதுரப்பாக்கம், முடிச்சூர், அகரம்தென் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில்  துப்புரவு பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லை.
இதனால் அப்பணிகள் மிகவும் மந்த கதியில் நடந்து வருவதாக பொது மக்களிடையே புகார் எழுந்துள்ளது. இதனால் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, பொதுவாக, ஊராட்சிகளில்  மக்கள் தொகை அடிப்படையில் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.  அதனடிப்படையில் பார்த்தால் கூட  நான்கு ஊராட்சிகளிலும்  போதிய ஆட்கள் இல்லை.  தற்போதைய நிலவரப்படி  அகரம்தென் 9, மதுரப்பாக்கம் 4, முடிச்சூர் 6 மற்றும் திருவஞ்சேரியில் 11 என குறைந்த எண்ணிக்கை அளவில் துப்புரவு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இதில்  திருவஞ்சேரி, முடிச்சூர் ஊராட்சிகளில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு, குறைந்தபட்சம்   30 பேரும், மற்ற ஊராட்சிகளில் 15 பேரும் 
நியமிக்கப்பட்டால் தான்  துப்புரவு பணிகள்  செயலாற்ற முடியும்.  இவ்வாறு சமூக ஆர்வலர்களுகம் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

Label