OUR CLIENTS
திருமண ஜோடிக்கு பெட்ரோல் பரிசு
திருமண ஜோடிக்கு பெட்ரோல் பரிசு Posted on 17-Sep-2018 திருமண ஜோடிக்கு பெட்ரோல் பரிசு

கடலூர், செப். 17-

மணமேடைக்கு பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர்கள்: அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார்! பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர்கள்.

கடலூரில் நடைபெற்ற திருமண வரவேற்பில் புதுமணத் தம்பதியருக்கு, நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல் பரிசளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமாரச்சி கிராமத்தில், கனிமொழி - இளஞ்செழியன் ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் வருகை தந்திருந்தனர்.

பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர்கள் திருமணத்திற்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் சக நண்பர்கள், புதுமணத் தம்பதியினருக்கு 5 லிட்டர் பெட்ரோலை கேனில் பரிசாக அளித்தனர். இதனை திருமண மண்டபத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். முதலில் காரணம் புரியாமல் குழம்பிய மக்கள், பின்னர் பெட்ரோல் விலை உயர்ந்த பொருளாக மாறி வருவதை உணர்த்தும் விதமாக இளைஞர்கள் இதனை செய்துள்ளதை புரிந்து கொண்டு சிரிப்பில் ஆழ்ந்தனர்.

தற்போது பெட்ரோல் விலையேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நூதன பரிசை அளித்ததாகவும் அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பரிசை மணமக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்திலேயே கடலூரில் தான் பெட்ரோல் அதிக விலைக்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Label