OUR CLIENTS
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது!
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது! Posted on 21-Sep-2018 மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது!

கோலாலம்பூர், செப். 21-

 மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது புதிதாக 21 பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டாதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது 7 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து நேற்று 21 புதிய பண மோசடி வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை கைது செய்தனர். நேற்று காலை நஜீப் ரசாக்கிடம் தீவிர விசாரனை நடத்தினர்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி நூர் ரஷித் இப்ராகீம் கூறுகையில், நஜீப் ரசாக்கின் வங்கி கணக்கில் 681 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முறையற்ற முறையில் பரிமாற்றம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் மீது 21 வழக்குகள் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை கைது செய்யப்பட்ட நஜீப் ரசாக்கிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நேற்று மதியம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Label