OUR CLIENTS
வேலூரில் இந்திரா நர்சிங் ஹோம் என்ற பெயரில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் தப்பியோட்டம்!
வேலூரில் இந்திரா நர்சிங் ஹோம் என்ற பெயரில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் தப்பியோட்டம்! Posted on 21-Sep-2018 வேலூரில் இந்திரா நர்சிங் ஹோம் என்ற பெயரில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் தப்பியோட்டம்!

வேலூர், செப். 21-

வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது கிட்டத்தட்ட தமிழகத்தின் வட மாவட்டங்கள் முழுவதற்கும் பிரபலமான வேலூரைச் சேர்ந்த மருத்துவர் சங்கர் அறுவை சிகிச்சை செய்ய தகுதி இல்லாதவர் என இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பின் தமிழகத்தலைவர் மருத்துவர் செந்தில் என்பவரால் கண்டறியப்பட்டுள்ளது.

வேலூர் மாநகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சைதாப்பேட்டை பகுதியில் மெயின் பஜார் ரோட்டில் இந்திரா நர்சிங்ஹோம் என்ற பெயரில் டாக்டர் சங்கர் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அங்கு மூலம், பௌத்திரம், சிறுநீரகக்கல் ஆகிய பிரச்னைகளுக்கு லேசர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. மேலும், பொது அறுவை சிகிச்சை, லேப்ரோஸ்கோப்பி,  மகப்பேறு, பெண்களுக்கு கர்பப்பை அகற்றம், ஓவரி சிகிச்சைகள் என வேலூரின் ஆல் ரவுண்டர் மருத்துவராக தன்னை வளர்த்துக்கொண்டு வலம் வந்தார். இவர் எம்.பி.பி.எஸ். மட்டுமே படித்துள்ளார் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கில் அறுவை சிகிச்சைகள் செய்துள்ள இவர் அறுவை சிகிச்சைகள் செய்ய தகுதிக்கு தேவையான மருத்துவ முதுநிலை படிப்பை படிக்காதவர். ஆனால் அறுவை சிகிச்சைகளையே முதன்மையான வேலையாக செய்து வந்தார். இந்நிலையில் இவர் முதுநிலை படிப்பை படிக்காதவர் என அறியப்பட்டதால் இப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், தலையில் இடி விழுந்தது போலவும் உள்ளது.

கத்தியின்றி ரத்தமின்றி லேசர் ஆபரேஷன்! ஆபரேஷன் முடிந்த இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பலாம் என்கிற வசனத்தை பிரபலமாக்கியவர் இந்த டாக்டர் சங்கர் என்பவர் தான். இவரது மருத்துவமனைக்கு தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்படும். இந்த விளம்பரங்களை பார்த்து பலர் வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள இந்திரா நர்சிங் ஹோமுக்கு வந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவரை இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பின் தமிழகத்தலைவர் டாக்டர் செந்தில் இந்திரா நர்சிங் ஹோமின் நிறுவனர் டாக்டர் சங்கரை அழைத்து விசாரித்து அவரது முதுநிலை மருத்துவ சான்றிதழை சரிபார்த்து அது முறையாக படித்து பெறப்பட்ட சான்றிதழ் அல்ல என  கண்டுபிடித்து  இனி டாக்டர் சங்கர்  அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது. 

 டாக்டர் சங்கர் முதுநிலை படித்ததாக காட்டிய சான்றிதழ் புனேவிலுள்ள ஒரு அமைப்பின் மூலமாக அமெரிக்காவிலுள்ள யுனிவர்சிட்டி ஆஃப் சீசெல்ஸ், அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் என்கிற பல்கலை நிறுவன சான்றிதழை வைத்துள்ளார். அதில் மாஸ்டர் ஆஃப் சர்ஜரி, ஜெனரல் சர்ஜரி ஆகியவற்றை செய்வதற்கு டாக்டர் சங்கர் போஸ்ட் கிராஜுவேட் படித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு (2017) ஜனவரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் வைத்துள்ள சான்றிதழ் போலி என்பதால் இனி அதை காட்டி இவர் அறுவை சிகிச்சை மருத்துவம்  பார்க்கக்கூடாது என மருத்துவக்கவுன்சில் தலைவரால் டாக்டர் சங்கருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் குறித்த விசாரணையை மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் சடகோபன் விசாரித்து வருகிறார்.

இதுவரை டாக்டர் சங்கர் செய்த அறுவை சிகிச்சைகள் மருத்துவ விதி மீறல் என்பதில் ஐயமில்லை அதற்கு இவருக்கு அரசு என்ன தண்டனை வழங்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். வேலூரில் அரசு மருத்துவமனையில் கூட்டம் உள்ளதோ இல்லையோ இவரது இந்திரா நர்சிங் ஹோமில் நோயாளிகளின் கூட்டத்துக்கு குறைவிருக்காது. இந்திரா நர்சிங் ஹோமின் இந்த சர்ச்சை குறித்து விசாரிக்கவும் டாக்டர் சங்கர் அவர்களை சந்திக்கவும் நேரில் சென்ற போது பரபரப்பான நோயாளிகள் இருந்தனர் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் விசாரித்ததில் டாக்டர் சங்கர் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் என கூறினர். அதற்குள்ளாக நம்மை அணுகிய ஒருவர்  தன்னை டாக்டர் சாலமன் என அறிமுகப்படுத்திக்கொண்டு, டாக்டர் இங்கில்லை என கூறியதுடன் மாலை 6 மணிக்கு மேல் வாருங்கள் என கூறினார். உடனே டாக்டர் சங்கரை 9842342525  என்ற எண்ணில்  தொடர்பு கொண்டபோது வேறு ஒருவருடன் பேசிக்கொண்டுள்ளதாக தெரிந்த பின்னர் அவரும் நம்மை தொடர்பு கொள்ளவில்லை.

அறுவை சிகிச்சை செய்ய தகுதியில்லாத முதுநிலை மருத்துவ  படிப்பை முடிக்காமலேயே  அறுவை சிகிச்சைகளை செய்துள்ள டாக்டர் சங்கரின் இந்திரா நர்சிங் ஹோமுக்கு அரசு மருத்துவ காப்பீட்டின் கீழ் அறுவை சிகிச்சைகளுக்கு அரசு அனுமதியும், அதற்கான பணமும் அளித்தது எப்படி? பல அறுவை சிகிச்சைகளை செய்து அதற்குண்டான கட்டணத்தை அரசிடமிருந்து டாக்டர் சங்கர் பெற்றது எப்படி? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் இன்று பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மனதில் எழத் தொடங்கியுள்ளது. 

மாவட்ட  தலைநகரத்தில் தான் இவரது மருத்துவமனை  உள்ளது. மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அலுவலகமும்,  அரசு முதுநிலை மருத்துவக்கல்லூரியும் இதே வேலூர் மாவட்டத்தில்தான் உள்ளது. ஆனால் இவர்கள் யாரும் டாக்டர் சங்கர் குறித்தும் அவரது மருத்துவமனை குறித்தும் விசாரித்ததாக தெரியவில்லை. தகுதியில்லா மருத்துவரிடம் திறமை மட்டும் இருக்குமா என பொதுமக்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்துக்கு அரசு அதிகாரிகள் தான் விளக்கி பதில் கூற வேண்டும். பல்லாயிரக்கணக்காண மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத மருத்துவத்தை வழங்கிய டாக்டர் சங்கருக்கு சட்டம் எந்த வகையில் கடமையை செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும்.  இவரைப்போல் இன்னும் எத்தனை டாக்டர்கள் வேலூரில் மறைந்து கொண்டு உள்ளனரோ தெரியவில்லை? சில நாட்கள் முன்புதான் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் நவீன் மருத்துவமனையில் சிறு நீரக கல் நீக்க அறுவை சிகிச்சை செய்து 6ம் வகுப்பு மாணவனை மரணமடையச் செய்தார் அச்சுதன் என்ற மருத்துவர். டாக்டர் சங்கரிடம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் ஒரு நல்ல மருத்துவரை நாடிச்சென்று தங்களை பரிசோதித்துக்கொள்வது நலம் என்று மட்டும் சொல்லத்ற தோன்றுகிறது. இதுபோன்ற போலிகளை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புடன் விசாரித்து நோயாளிகள் தங்களுக்கு நல்ல மருத்துவமனையை தேர்வு செய்து வைத்தியம் பார்த்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இவர் அரசை ஏமாற்றி வாங்கிய பணம் மற்றும் இவர் வாரி குவித்த சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும். சட்டத்தை ஏமாற்றினார், மக்களை ஏமாற்றினார் இவருக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும். பணம் பாதாளம் வரையில் பாயும் என்று சொல்வார்கள். இவரும் பணத்தை கொடுத்து சட்டத்தை வளைக்கிறாரா என்பதும் போகப் போகத்தான் தெரியும். 

இதுபோன்று மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்கின்ற பெயரில் காலாவதியான மருந்துகளை பயன்படுத்தி  வருகின்றனர். மளிகை பொருட்கள் பட்டியல் மாதிரி மருந்துகளை எண்ணிபார்த்து லிஸ்ட் எழுதிகொடுப்பது போன்ற  கீழ்த்தரமான வேலைகளில் சில மருத்துவர்கள் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற மருத்துவமனைகளை ஆய்வு செய்து மருத்துவ கவுன்சில் ஒழுங்குபடுத்தவேண்டும்.

Label