OUR CLIENTS
முக ஸ்டாலினை சந்தித்தால் திமுக-வுடன் கூட்டணியா? - தம்பிதுரை விளக்கம்
முக ஸ்டாலினை சந்தித்தால் திமுக-வுடன் கூட்டணியா? - தம்பிதுரை விளக்கம் Posted on 21-Sep-2018 முக ஸ்டாலினை சந்தித்தால் திமுக-வுடன் கூட்டணியா? - தம்பிதுரை விளக்கம்

மணப்பாறை, செப். 21- 
பாஜக - திமுக அரசியல் சந்திப்புகளை வைத்துதான் கூட்டணி என கூறினேன், திமுக உடன் கூட்டணி என்ற கேள்விக்கு முக ஸ்டாலினிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, திருச்சி மாவட்டம் மணப்பாறை சூளியாப்பட்டியில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தார்.

கே: பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதையொட்டியே தொகுதி மக்களை நீங்கள் சந்தித்து வருவதாகவும், பதவிக்காக பா.ஜ.க. வேட்பாளராக கூட போட்டியிடக் கூடும் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே?
ப: அந்த கருத்து சரியல்ல. நான் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதிதல்ல. தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறேன். எனவே ஒரு தனி நபரின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

கே: பா.ஜ.க. தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததை ரகசிய கூட்டணி என்று அ.தி.மு.க.வினர் விமர்சித்து வரும் நிலையில், விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க.வை சேர்ந்த நீங்கள் சந்தித்தது கூட்டணியா? என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே. என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளாரே?.
ப: நான் தனி விமானத்தில் செல்ல முடியாது. விமான நிலையத்திற்கு செல்லும் போது சந்திப்பது வேறு. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. தலைவர்களை அழைப்பது என்பது வேறு.

அதாவது அரசியல் நிகழ்வுகளும், சாதாரண சந்திப்புகளும் வெவ்வேறானவை. அந்த இரு கட்சிகளின் அரசியல் சந்திப்புகளை வைத்துத்தான் தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி என்று கூறினேன். ஆனால் நானும் மு.க.ஸ்டாலினும் சந்தித்து கொண்டோம் என்பதற்காக எங்களுக்கும் தி.மு.க.வுடன் கூட்டணியா? என்பதை மு.க.ஸ்டாலின் தான் விளக்க வேண்டும். அல்லது அது தொடர்பாக கே. என்.நேரு தான் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Label