OUR CLIENTS
அரசு கேபிள் டிவி சிக்னல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்!
அரசு கேபிள் டிவி சிக்னல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்! Posted on 21-Sep-2018 அரசு கேபிள் டிவி சிக்னல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்!

வேலூர், செப். 21-

அரசு கேபிள் டிவி சிக்னல் கட்டுப்பாட்டு அறை வாலாஜாபேட்டையில் தொடங்கப்பட்டதால் ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையை அளிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வாயிலாக டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு டிஜிட்டல் சேவையை அளித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்கு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இ¬த்ததொடர்ந்து தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கி வருகின்றது. இது தனியார் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உள்ளூர் ஆப்ரேட்டர்களுக்கு மறைமுகமாக சலுகைகளை வழங்கி தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை விற்பனை செய்து டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சந்தாதாரர்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ்நாடு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநர் ஜான்லூயிஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் வேலூர் மாவட்ட அரசு கேபிள் டிவி ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட ஆட்சியருமான ராமன் ஆலோசனையின் பேரிலய் கேபிள் டிவி சிக்னல் அறை வாலாஜா பகுதியில் திறக்கப்பட்டது. 

இதற்கான பணிகளை கேபிள் டிவி தனி வட்டாட்சியர் இளஞ்செழியன், தலைமை இடத்து அலுவலர் கௌதமன், தொழில் நுட்ப உதவியாளர் முத்துக்குமார் மேற்கொண்டனர்.  இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தனி வட்டாட்சியர் இளஞ்செழியன், அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து உள்ளூர் ஆப்ரேட்டர்களிடம் விளக்கினார். இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து விநியோகிஸ்தர்கள் கேபிள் இணைப்பை பெற்று உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் வாயிலாக சந்தாதாதாரர்களுக்கு ஒளிபரப்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக பெற்று சந்தாதாரர்களுக்கு வழங்கி அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் மாதா மாதம் வசூலித்து கொள்ள வேண்டும். இந்த சேவையை கூட்டத்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட ஆப்ரேட்டர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். உடனடியாக செட்டாப்பாக்ஸ்களை சந்தாதாரர்களுக்கு வழங்கி சேவையை தொடங்கவும் உறுதியளித்தனர்.

 இதேபோன்று சிக்னல் அறை வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் திறக்க வேண்டும் என்று நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் மாத கட்டணம் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை கேபிள் டிவி தனி வட்டாட்சியர் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கேபிள் டிவி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பவர்கள் தனி வட்டாட்சியர் இளஞ்செழியனை 9003803916 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், புகார்களை தெரிவிக்க விரும்புவோர் கேபிள் டிவி அலுவலகம் அமைந்துள்ள சத்துவாச்சாரிக்கு நேரில் சென்று மனுவாக எழுதி கொடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Label