OUR CLIENTS
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது - வைகோ கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது - வைகோ கோரிக்கை Posted on 21-Sep-2018 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது - வைகோ கோரிக்கை

மதுரை, செப். 21-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையித்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு, சட்டப் பேரவையில் சட்ட திருத்தம் நிறைவேற்றி இருக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எங்கள் கருத்துகளை கேட்கத் தயாரில்லை. தென் மண்டல தீர்ப்பாயத்தில் மறுபடியும் எங்கள் கருத்துகளை எடுத்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 24–ம் தேதி தென் மண்டல தீர்ப்பாயத்தில் எங்கள் கருத்துகளைக் கூற சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு, வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Label