OUR CLIENTS
மோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் கூட்டணியை அமைத்துள்ளாரா ராகுல்? - அமித் ஷா கேள்வி
மோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் கூட்டணியை அமைத்துள்ளாரா ராகுல்? - அமித் ஷா கேள்வி Posted on 23-Sep-2018 மோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் கூட்டணியை அமைத்துள்ளாரா ராகுல்? - அமித் ஷா கேள்வி

புதுடெல்லி,  செப். 23-
ரபேல் முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நாளுக்கு நாள் வார்த்தைப்போர் அதிகரித்துவரும் நிலையில் ராகுல் காந்தி பாகிஸ்தானுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளரா? என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016ஆம் ஆண்டில் மோடி அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி, பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில்,”போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார். ஹாலன்டேவின் இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டார், என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று பதிலடி கொடுத்துள்ளார். அமித் ஷா டுவிட்டரில்,”பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருகிறார். பாகிஸ்தான் அரசும் இதையே தான் கூறி வருகிறது. எனவே, மோடிக்கு எதிரான ராகுல் காந்தியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாகிஸ்தானும் ஆதரிக்கிறது. இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச அளவில் பாகிஸ்தானுடன் ராகுல் காந்தி மெகா கூட்டணி அமைத்துள்ளரா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே நாளுக்கு நாள் வார்த்தைப்போர் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Label