OUR CLIENTS
வரம்பு மீறி யார் பேசினாலும் தவறுதான் - தமிழிசை
வரம்பு மீறி யார் பேசினாலும் தவறுதான் - தமிழிசை Posted on 23-Sep-2018 வரம்பு மீறி யார் பேசினாலும் தவறுதான் - தமிழிசை

ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 23-
வரம்பு மீறி யார் பேசினாலும் தவறுதான். நடிகர் கருணாஸ்  மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோயில் சிலை திருட்டு அதிகமாக நடைபெறுவதால் போலியான சிலையை வழிபடுகிறோமோ என பக்தர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை யார் வரம்பு மீறி பேசினாலும் அது தவறுதான். எம்எல்ஏ கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா, தனது மீதான புகாரை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வார். விநாயகர் சிலையை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கும் மக்களுக்கான  மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தமிழக அரசும் இணைந்ததற்கு நன்றி. இவ்வாறு,  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம்  கூறினார்.

Label