OUR CLIENTS
டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்கும் ரஜினி - ஏசி சண்முகம் தகவல்
டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்கும் ரஜினி - ஏசி சண்முகம் தகவல் Posted on 24-Sep-2018 டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்கும் ரஜினி - ஏசி சண்முகம் தகவல்

சென்னை, செப். 24-
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என்றும் டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக கூறினார். அவர் உங்கள் நண்பர். அறிவிப்பு எப்போது வரும் என்று கூற முடியுமா?

பதில்:- ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
கேள்வி:- உங்கள் புதிய நீதி கட்சி அவருடன் இணைந்து செயல்படுமா?
பதில்:- ரஜினி தொடங்கும் புதிய கட்சியுடன் புதிய நீதி கட்சியும் கரம் கோர்த்து செயல்படும். இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறினார்.

Label