OUR CLIENTS
மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. மின்நுகர்வோர் கடும் பாதிப்பு!
மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. மின்நுகர்வோர் கடும் பாதிப்பு! Posted on 24-Sep-2018 மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. மின்நுகர்வோர் கடும் பாதிப்பு!

சென்னை, செப். 24-

 மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட உள்ளதாக சிலர் தவறான தகவலை பரப்பும் நிலையில் மின் வாரியமும் அதை தெளிவுபடுத்தாமல் இருப்பதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

புதிய மின் இணைப்பு வழங்கும் போது பதிவு கட்டணம், மீட்டர் வாடகை உள்ளிட்ட பல்வகை கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது. அதில் பதிவு கட்டணம் ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருவதால் 18 சதவீதம் வரி விதிக்குமாறு மின் வாரியத்தை ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவுறுத்தியது. இதையடுத்து வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு பதிவு கட்டணமான 50 ரூபாய்க்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கும்படி பொறியாளர்களுக்கு ஜூன் இறுதி முதல் மின் வாரியம் தெரிவித்தது. இந்நிலையில் மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பதாக சிலர் தகவல் பரப்புவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது: புதிய மின் இணைப்பு வழங்கும் போது ஒரே முறை வசூலிக்கும் பல்வகை கட்டணத்தில் பதிவு கட்டணம், மீட்டர் வாடகை கட்டணத்திற்கு மட்டும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி உண்டு. அதிலும் வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவில் மீட்டர் வாடகை வராது. அது தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்தும். இரு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் மின் பயன்பாட்டு கட்டணத்திற்கு வரி கிடையாது. சிலர் இம்மாதம் 1ம் தேதி முதல் மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுவதாக மக்களிடம் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக ஊழியர்களும் சரியான பதில் தருவதில்லை. 

இதை சாதகமாக பயன்படுத்தி சில ஊழியர்கள் ரசீதில் வரி அச்சாகவில்லை எனக்கூறி நுகர்வோரிடம் கூடுதல் பணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. அதனால் எதற்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது என்ற விபரத்தை அனைத்து மின் கட்டண மையங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்களில் மின் வாரியம் விளம்பரம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label