OUR CLIENTS
நீர்த்தேக்க தொட்டி அருகே திறந்தவெளி கழிப்பிடம்!
நீர்த்தேக்க தொட்டி அருகே திறந்தவெளி கழிப்பிடம்! Posted on 24-Sep-2018 நீர்த்தேக்க தொட்டி அருகே திறந்தவெளி கழிப்பிடம்!

வேலூர், செப். 24-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துமண்டபம் பகுதியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. 

கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இதற்க்காக அமைக்கப்பட்ட குழாய்கள் அவ்வப்போது உடைந்துபோவது வாடிக்கையாக உள்ளது. இந்த தரைமட்ட தொட்டி உள்ள இடத்தில் கழவுநீர்க்கால்வாய் நிரம்பி அப்பகுதியைச் சுற்றிலும் தேங்குகின்றது. அங்கிருந்து 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. குடிநீரில் சுகாதாரம் எப்படி இருக்கும். இப்படி கேட்பாரற்று கிடக்கும் நீர்தேக்கத் தொட்டியின் அருகே அப்பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டம் 1295 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரத்துறையும், குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரிகள் இந்த பகுதியை நேரில் பார்த்து சுகாதாரத்தை உறுதிப்படுத்துதல் அவசியம்.

Label