OUR CLIENTS
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் முக ஸ்டாலின்-தினகரன் பெயர்கள்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் முக ஸ்டாலின்-தினகரன் பெயர்கள் Posted on 24-Sep-2018 எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் முக ஸ்டாலின்-தினகரன் பெயர்கள்

சென்னை, செப். 24-
சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் பெயர்களுடன் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தினகரன் ஆகியோரது பெயர்கள் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டங்கள் தோறும் இந்த விழா நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இதுதொடர்பான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது பெயர்களுடன் தி.மு.க. முன்னணி தலைவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரது பெயர்கள் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் பெயரும் அழைப்பிதழில் உள்ளது. இதன்மூலம் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும், தினகரன் எம்.எல்.ஏ.வும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, அரசு விழா என்ற முறையில் அழைப்பிதழில் பெயர்களை போட்டிருப்பார்கள். இதில் பங்கேற்பது குறித்து இதுவரையில் கட்சி தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் இல்லை என்றார்.

Label