OUR CLIENTS
பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு
பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு Posted on 14-Jul-2016 பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு

அமெரிக்கா:
அமெரிக்கா உலகில் பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் நிதி வாங்கும் நாடு பாகிஸ்தான்.

இந்த நாடு தங்கள் நாட்டில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு உதவுமாறு அமெரிக்காவிடம் கையேந்தி வருகிறது. இதற்காக ஏராளமான பணத்தை அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது.

அமெரிக்காவிடம் பணத்தை வாங்கி விட்டு அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனை தங்கள் நாட்டில் வைத்து பாகிஸ்தான் பாதுகாத்தது அம்பலமானது. அங்கு அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடன் கொல்லப்பட்டான்.

இது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்ய அந்த நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 'பாகிஸ்தான் தீவிரவாதிகள் வி‌ஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. அந்த நாட்டை நாம் நம்பக்கூடாது. பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதி உதவியை நிறுத்த வேண்டும்' என்று அமெரிக்க எம்.பி.யும் ஆசிய பசிபிக் விவகார குழு தலைவருமான மாட்சால்மோன் மற்றும் பல எம்.பி.க்கள் கூறி உள்ளனர்.

Label