OUR CLIENTS
கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை
கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை Posted on 24-Sep-2018 கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

திருவனந்தபுரம், செப். 24-
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின் மீண்டும் கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத வகையில் பேய் மழை பெய்தது. இதில் மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 488 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மத்திய குழு 2 நாட்களுக்கு முன்பு தான் அங்கு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை (25-ந் தேதி) மாநிலத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மழை அளவு 66.4 மில்லி மீட்டர் முதல் 124.4 மில்லி மீட்டர் அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் முதல்வர் அலுவலகத்துக்கும், மாநில பேரிடர் மீட்பு குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த 3 மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவித்துள்ளது. அதோடு இந்த 3 மாவட்டங்களுக்கும் மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இதுபோல 26-ந் தேதி பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், வயநாடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Label