OUR CLIENTS
அமைப்பு செயலாளருடன் மோதும் அதிமுக மாவட்ட செயலாளர் உடையாரும், உடையாரும் நேருக்கு நேராக பலப்பரீட்சை!
அமைப்பு செயலாளருடன் மோதும் அதிமுக மாவட்ட செயலாளர் உடையாரும், உடையாரும் நேருக்கு நேராக பலப்பரீட்சை! Posted on 25-Sep-2018 அமைப்பு செயலாளருடன் மோதும் அதிமுக மாவட்ட செயலாளர் உடையாரும், உடையாரும் நேருக்கு நேராக பலப்பரீட்சை!

விழுப்புரம், செப். 25-

முன்னாள் அதிமுக அமைச்சர் மோகனுடன் மோதும் உளுந்தூர்பேட்டை அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு எம்எல்ஏ. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவில் புகைச்சலோ புகைச்சல் ஆரம்பித்துள்ளது. ஒருபுறம் வடக்கு மாவட்டம், மறுபுறம் தெற்கு மாவட்டம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மாவட்டமாக அதிமுக இருந்தபோது மறைந்த எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளராக வலம் வந்தார். அவரை மாவீரன் என்று அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் அவரை செல்லமாக அழைத்தனர். 

ஆனால் சந்தர்ப்பத்தை பார்த்து வந்த திமுகவினர் எஸ்.எஸ்.பன்னீர்செல்வத்தை அரசியலில் அநாதையாக்க திட்டமிட்டனர். இந்த நேரத்தில் ஜெயலலிதா எஸ்.எஸ்.பன்னீர்செல்வத்தை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார். இதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட முன்னாள் திமுக அமைச்சரும், இந்நாள் திமுக திருக்கோயிலூர் தொகுதி எம்எல்ஏவுமான க.பொன்முடி தந்திரமாக எஸ்.எஸ். பன்னீர்செல்வத்துக்கு மேல்மலையனூர் தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையச் செய்தார். ஆனால் பொன்முடி சொன்னது போன்று எம்எல்ஏ சீட் வாங்கி தரவில்லை. மாறாக விழுப்புரம் நகரமன்ற தலைவராக போட்டியிட சீட் வாங்கி தந்தார். அவரும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார் எஸ்.எஸ்.பன்னீர்செல்வம். இதற்கு பிறகு திண்டிவனத்தில் இருந்து வந்தவர்தான் சி.வி.சண்முகம். மெல்ல மெல்ல ஜெயலலிதா ஆசியுடன் மாவட்ட செயலாளர், அமைச்சர் என்று படிப்படியாக உயர்ந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த மருத்துவர் லட்சுமணன் அதிமுகவில் மாவட்ட மருத்துவரணி செயலாளர், எம்பி, வடக்கு மாவட்ட செயலாளர் என்று உயர்ந்தார். இப்போது சி.வி.சண்முகத்துக்கும், டாக்டர் லட்சுமணனுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. அதாவது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இணைந்தார் லட்சுமணன். பின்னர் கட்சிகள் இணைந்த பிறகு வடக்கு மாவட்ட செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் லட்சுமணன். இப்படி வடக்குபகுதி அரசியல் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. தெற்கு பகுதியில் பார்த்தால் பரமசிவம் எம்எல்ஏ அதிமுகவில் இருந்தபோது மாவட்ட செயலாளராக இருந்தார். அவரை ஓரங்கட்டி விட்டு முன்னாள் சின்னசேலம் ஒன்றிய செயலாளர் மோகன் வந்தார். பின்னர் கட்சியில் ஜெயலலிதா ஆசியுடன் தெற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் என்று வலம் வந்தார். இவருக்கு பிறகு இந்த தெற்கு மாவட்டத்தில் அதிமுகவில் பெயர் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை என்று அடித்து சொல்லலாம். திருநாவலூர் தொகுதி எம்எல்ஏ கே.ஜி.பி.ஞானமூர்த்தி இருந்தார். அவரும் டிடிவி அணியில் அமமுகவில் இணைந்து மாவட்ட செயலாளராக வலம் வருகிறார். 

உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு கட்டப்பஞ்சாயத்து, அடுத்தவர் சொத்துக்களை அபகரித்தல், மிரட்டுவது, காவல் நிலையத்தில் பஞ்சாயத்து பேச செல்வது என்று பல்வேறு சமூக விரோத செயல்களிலும், மணல் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மோகனுக்கு கடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் குமரகுரு தெற்கு மாவட்ட செயலாளராக சி.வி.சண்முகம் ஆதரவுடன் நியமிக்கப்பட்டார். இதனால் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போல தெனாவெட்டாக குமரகுரு நடந்து கொண்டுள்ளார். தெற்கு மாவட்டத்தில் சுணக்கம் காணப்பட்டதை மாற்றியமைக்க அதிமுகவினர் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ப.மோகன் மீண்டும் அமைப்பு செயலாளர் பதவியை பெற்று வந்துள்ளார்.

இதனால் வயிற்றெரிச்சல் ஆன குமரகுரு எம்எல்ஏ செய்வதறியாது திகைப்பில் உள்ளார். இதற்கிடையே மோகன் மாநில அமைப்பு செயலாளராக பதவி பெற்றுக் கொண்டு கள்ளக்குறிச்சியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவரை வரவேற்க தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஒன்றிய செயலாளர்களில் ஒருவரான தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் அய்யப்பன் மட்டுமே வந்திருந்தார். மற்ற 10 ஒன்றிய செயலாளர்களும் குமரகுருவின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இதனால் யாரும் வரவேற்பில் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் மோகன் சளைக்கவில்லை. அவர் எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலைகளுக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தி விட்டு, கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு பணிகளை கவனிக்க தொடங்கினார். மோகன் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிவிடக்கூடாது என்று எவ்வளவோ மல்லுக்கட்டினார் குமரகுரு. 
இரண்டு உடையார்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் படலம் தெற்கு மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. நீயா நானா என்று பலப்பரீட்டை தொடங்கி விட்டனர். குமரகுருவின் அட்ராசிட்டி பிடிக்காத கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படி பிரிந்து சென்ற பிரபு எம்எல்ஏவை அமமுகவில் இருந்து விலகச் சொல்லி மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று எட்பபாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அமைப்பு செயலாளர் மோகனுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் தெற்கு மாவட்ட அதிமுகவில் பரபரப்பு நிலவ ஆரம்பித்துள்ளது. 

Label