OUR CLIENTS
கிரீன் கார்டு வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா திட்டம்
கிரீன் கார்டு வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா திட்டம் Posted on 25-Sep-2018 கிரீன் கார்டு வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா திட்டம்

வாஷிங்டன், செப். 25-

அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு கிரீன் கார்டு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளை நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை அமெரிக்க உள்துறை அமைச்சகம் அந்நாட்டு அரசிடம் அளித்துள்ளது.

அத்தகைய கட்டுப் பாடுகள் அமலாகினால், அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் ஹெச் 4 விசா பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அரசு வெளியிட்ட அறிவிப்பின் தாக்கம் மறைவதற்குள்ளாகவே, இந்தியர்களை பாதிக்கும் மேலும் ஒரு திட்டம் முன்மொழியப்பட்டிருப்பது அதிருப்தி குரல்களை எழச் செய்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்ட வர்களுக்கு குறிப்பிட்ட வரையறைகளின் கீழ் கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. அத்தகைய அங்கீகாரம் பெற்றவர்கள் அந்நாட்டு அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகள் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால், அவர்களில் பலருக்கு கிரீன் கார்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனிடையே, தற்போது 6.3 லட்சம் இந்தியர்கள் அத்தகைய அங்கீகாரம் கோரி அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், புதிதாக எவருக்கும் கிரீன் கார்டு வழங்கக் கூடாது என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்டவர்களுக்கு அதை நீட்டிக்கக் கூடாது என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் அந்த அமைச்சகத்தின் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, விசா நீட்டிப்பு கோரியும், புதிய விசா கோரியும் விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் எவரும் அரசின் பலன்களை எதிர்பார்க்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளின் மீது கருத்து தெரிவிக்க மக்களுக்கு 60 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றம் அவற்றுக்கு ஒப்புதல் அளித்தால் புதிய நடைமுறை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

Label