OUR CLIENTS
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் Posted on 25-Sep-2018 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, செப். 25-

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

கிரிமினல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகளாகிய எம்.பி., எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றமத்தில் நேற்று தீர்ப்பு அளிக்க்கபட்டது. 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, கிரிமினல் வழக்கில் தண்டனை விதிப்புக்கு ஆளாகும் எம்.பி., எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பப்ளிக் இன்ட்ரஸ்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாய உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்

அந்த மனுக்களில், கிரிமினல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த மனுக்கள், உச்சநீதிமன்ற;ததில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். இதன்படி, அந்த மனுக்கள் மீது நேற்று  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

குற்றபத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது.  அரசியலில் , லஞ்சமும், ஊழலும்  கொஞ்சம் கொஞ்சமாக  வளர்ந்து வருவது வேதனை அளிக்கிறது. நாடாலுமன்றம் மூலமே சட்ட திருத்தத்தால் தடை விதிக்க முடியும்.  குற்ரபிண்ணனி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். அரசியல் கட்சிகள் தாங்களாகவே அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.

Label