OUR CLIENTS
காங்கிரஸ் அதிகாரத்தை இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது - பிரதமர் மோடி தாக்கு
காங்கிரஸ் அதிகாரத்தை இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது - பிரதமர் மோடி தாக்கு Posted on 25-Sep-2018 காங்கிரஸ் அதிகாரத்தை இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது - பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி, செப். 25-

பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அவதூறு பரப்பினாலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பா.ஜனதா கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்தியாவின் மேம்பாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். வாக்கு வங்கி அரசியல் நம்முடைய சமூகத்தை அழித்து விட்டது. வாக்கு வங்கி அரசியலை இந்தியாவைவிட்டு அகற்றுவதுதான் எங்களுடைய பணியாகும். மத்திய பிரதேச மாநிலம் வளர்ச்சி தொடர்பாக காங்கிரஸ் எந்த எண்ணமும் கொண்டது கிடையாது. மத்தியில் இப்போது ஆட்சியில் உள்ள பா.ஜனதா ஆட்சியின் நம்பிக்கை என்னவென்றால் இந்தியா வளர்ச்சியடை வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சியடை வேண்டும் என்பதே. மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தாலும் அதற்கான காரணங்களை ஆராய காங்கிரஸ் நினைக்கவில்லை. 

இப்போது கூட்டணி அமைக்க காங்கிரஸ் சிறிய கட்சிகளிடம் கெஞ்சுகிறது. காங்கிரஸ் உள்நாட்டில் கூட்டணி அமைப்பதில் தோல்வியை தழுவிவிட்டது, எனவே இந்தியாவிற்கு வெளியே கூட்டணி அமைக்க பார்க்கிறது. இந்திய பிரதமரை உலகமா தேர்வு செய்கிறது? 

 காங்கிரஸ் அதிகாரத்தை இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது? அவர்களிடம் இப்போது எதுவும் கிடையாது. காங்கிரஸ் கட்சி  எவ்வளவுதான் களங்கம் ஏற்படுத்தினாலும் தாமரை மலர்ந்துக் கொண்டேதான் இருக்கும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. 

Label