OUR CLIENTS
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது வழங்கினார் ராம்நாத் கோவிந்த்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது வழங்கினார் ராம்நாத் கோவிந்த் Posted on 25-Sep-2018 இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது வழங்கினார் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி, செப். 25-

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுக்கும் கவுரவமிக்க ‘கேல்ரத்னா’ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை முன்னாள் நீதிபதிகள் இந்தர்மீத் கவுர் கோச்சார், முகுல் முட்கல் ஆகியோர் தலைமையிலான கமிட்டிகள் பரிந்துரை செய்திருந்தது. அதற்கு ஒப்புதல் அளித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக விருது பட்டியலை வெளியிட்டது.

இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதை கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்திய அணியின் கேப்டனும், ‘நம்பர் ஒன்’ டெஸ்ட் பேட்ஸ்மேனுமான விராட் கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியன் மணிப்பூரைச் சேர்ந்த 24 வயதான மீராபாய் சானு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில்  விராட் கோலிக்கும், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுக்கும் கவுரவமிக்க ‘கேல்ரத்னா’ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

கிரிக்கெட் வீரருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்படுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் (1997-ம் ஆண்டு), டோனி (2007-ம் ஆண்டு) ஆகியோர் இந்த விருதை பெற்று இருக்கிறார்கள். இதே போல் கர்ணம் மல்லேஸ்வரி (1994-95), குஞ்சராணி (1995-96) ஆகியோருக்கு பிறகு பளுதூக்குதலில் இந்த விருதை பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையை மீராபாய் சானு பெற்றுள்ளார். 

அர்ஜூனா விருதுக்கு, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்களை அள்ளிய இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மந்தனா, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் உள்பட 20 பேர் தேர்வாகினர். அவர்களுக்கும் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

Label