OUR CLIENTS
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வசூல் வேட்டை நடத்தும் நேர்முக உதவியாளர்!
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வசூல் வேட்டை நடத்தும் நேர்முக உதவியாளர்! Posted on 26-Sep-2018 வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வசூல் வேட்டை நடத்தும் நேர்முக உதவியாளர்!

வேலூர், செப். 26-

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்து கொண்டு வசூல் வேட்டை நடத்தும் நேர்முக உதவியாளர் மீது பொதுமக்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

வேலூர் சத்துவாச்சாரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலராக ராமகிருஷ்ணன் பணியாற்றுகிறார். இவருக்கு நேர்முக உதவியாளராக (பிஏ) முரளி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வசூல் வேட்டை நடத்துவதற்காகவே மட்டும் பணியாற்றுகிறார். தனது இருக்கையில் உள்ள பணிகளை கவனிக்காமல் யார் ÔபÕ வைட்டமின் தருகிறார்கள், அதை வசூலிக்கும் பணியில் மட்டும் கண்கொத்தி பாம்பாக செயல்படுகிறார் முரளி. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இவரது இருக்கையில் உள்ள தொலைபேசி எண்: 0416-2252040 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஏதாவது சந்தேகம் கேட்டால் எரிந்து விழுவதுடன் தொலைபேசி இணைப்பை துண்டித்து கொள்வார். இதையே அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இதுபோன்ற அதிகாரிகளால் அரசுக்கும், உயரதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பல டிரைவிங் ஸ்கூல்களில் புரோக்கர்கள் வைத்து அவர்கள் வாயிலாக பல லட்சங்களை வாரி குவிக்கிறாராம் தில்லாலங்கடி பேர்வழி முரளி என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் இவரால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்கள். 

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பது போன்று நந்தி போன்று அமர்ந்து கொண்டு முரளி அலுவலத்தில் ஆட்டிப்படைக்கிறாரராம். 
இந்த அலுவலகத்தில் பணியாற்றும் மற்ற அலுவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக பேசி வருவதாகவும், கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்கு ஐயம் தீரும் வரை விளக்கம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் முரளியோ யார் அலுவலகத்துக்கு சென்றாலும் (புரோக்கர்கள் தவிர) நாயை விரட்டியடிப்பதை போன்று விரட்டுகிறாராம். இதை சந்தித்த பொதுமக்கள் பலர் தங்கள் மனதில் உள்ளதை சொல்ல புலம்புகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள இதுபோன்ற மனித மிருகங்களை கண்காணித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர். இதுபோன்று கையூட்டையே நம்பி வாழும் அரசு அலுவலர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கையை கடுமையாக எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label