OUR CLIENTS
அமைச்சர் பெயரில் போலி 'லெட்டர் பேடு' மின் வாரிய இடமாறுதலில் மெகா மோசடி!
அமைச்சர் பெயரில் போலி 'லெட்டர் பேடு' மின் வாரிய இடமாறுதலில் மெகா மோசடி! Posted on 27-Sep-2018 அமைச்சர் பெயரில் போலி 'லெட்டர் பேடு' மின் வாரிய இடமாறுதலில் மெகா மோசடி!

சென்னை, செப். 27-

மின்துறை அமைச்சர் தங்கமணி பெயரில் போலி லெட்டர் பேடு தயாரித்து அவரின் கையெழுத்தை போட்டு 200க்கும் மேற்பட்டோருக்கு இடமாறுதல் வழங்கி மின் வாரியத்தில் பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் என 86 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இடமாறுதல் வழங்க விதிமுறைகள் உள்ளன. அதன்படி இடமாறுதல் விரும்புவோர் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் விரும்பும் இடத்தை தெரிவித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும்.

அதை அதிகாரிகள் பரிசீலித்து காலி பணியிடங்களுக்கு ஏற்ப இடமாறுதல் வழங்குவர். சிபாரிசு, பணம் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் உதவியை நாடி எப்போது வேண்டுமானாலும் இடமாறுதல் பெறுகின்றனர்.இந்நிலையில் மின்துறை அமைச்சர் தங்கமணியின் பெயரில் போலி லெட்டர் பேடு தயாரித்து அதில் அவரின் கையெழுத்தையும் போட்டு பலருக்கு இடமாறுதல் வழங்கி பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளனர்.இதுகுறித்து மின் வாரிய வட்டாரங்கள்  கூறியதாவது:உதவியாளர் முதல் உதவி செயற்பொறியாளர் வரை உள்ளவர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவற்றை, நிர்வாக பிரிவும், செயற்பொறியாளர் முதல் தலைமை பொறியாளர் வரையிலான இடமாறுதலை செயலக பிரிவும் மேற்கொள்கின்றன.நிர்வாக பிரிவானது பணியமைப்பு தலைமை பொறியாளரின்கீழ் செயல்படுகிறது. செயலக பிரிவு தலைமை செயலகத்தில் இருந்து அரசு செயலரின் கீழ் இயங்குகிறது. தினமும் விரும்பிய இடத்திற்கு இடமாறுதல் கேட்டு 20க்கும் மேற்பட்டோர் நிர்வாக பிரிவில் மனு அளிக்கின்றனர்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் சிபாரிசு கடிதங்களுடன் மனுக்கள் வரும். அவற்றை அந்த பணிகளை பார்க்கும் அதிகாரிகள் தனித்தனியாக பிரிப்பர். 

சிபாரிசு கடிதத்துடன் வரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து தங்கள் உயரதிகாரிகளுக்கு தெரிவித்து இடமாறுதல் வழங்க பரிந்துரைப்பர்.நிர்வாக பிரிவில் பணிபுரியும் சிலர் மின்துறை அமைச்சர் பெயரில் போலியாக லெட்டர் பேடு தயாரித்து அதில் அமைச்சரின் கையெழுத்தையும் போலியாக போட்டு அவர் பரிந்துரை செய்தது போல் 200க்கும் மேற்பட்டோருக்கு இடமாறுதல் வழங்கியுள்ளனர்.

இதற்காக தலா 10 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். அந்த லெட்டர் பேடில் அவசரம் மிக அவசரம் என எழுதப்பட்டதால் அதில் சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து
அந்த விபரத்தை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து முறைகேடு செய்தவர்கள் சில தினங்களுக்கு முன் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து தங்களுக்கான இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரினர்.அதன்படி சங்கத்தினரும் மின் வாரிய தலைவரை சந்தித்து இடமாறுதல் செய்த அதிகாரிகளை மீண்டும் பழைய இடத்தில் நியமிக்க வலியுறுத்தினர். அதை ஏற்காத வாரிய தலைவர் போலி ஆவணங்கள் கொடுத்து இடமாறுதல் வழங்கியது தொடர்பாக விஜிலென்ஸ் பிரிவு விசாரித்து வருவதாகவும், விசாரணை முடியும் வரை இடமாறுதல் திரும்ப பெறப்படாது என்றும் உறுதியாக தெரிவித்துவிட்டார்.மின் வாரிய இடமாறுதல் தொடர்பாக தனி குழு அமைத்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரிய வரும். தவறு செய்தவர்கள் மீது சஸ்பெண்ட், டிஸ்மிஸ் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

Label