OUR CLIENTS
சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்
சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல் Posted on 27-Sep-2018 சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்

கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரையில் சட்னி, துவையல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக் கீரை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்

தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
 காய்ந்த மிளகாய்- 4,
புளி - கொட்டைப்பாக்களவு,
உளுந்தம் பருப்பு- 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கடுகு -தாளிக்க,
எண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்த மிளகாய் & 3 சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும். கீரை சற்று வதங்கியதும் ஆறவைக்கவும்.
நன்றாக ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். 
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், 1 காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான முருங்கைக் கீரை துவையல் ரெடி.

Label