OUR CLIENTS
தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல- உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல- உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Posted on 27-Sep-2018 தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல- உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி, செப். 27-    

வேறெருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை. எனவே, தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டத்தின் 497ஆவது பிரிவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497ஆவது பிரிவு குற்றம் என சொல்கிறது. இந்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் நீதிபதிகள்,”தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல. இந்த சட்டப்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலுறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது” என்று தெரிவித்தனர்.

மேலும்,”இருவரும் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்கமுடியாது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497ஆவது பிரிவு ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

Label