OUR CLIENTS
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சோதனை
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சோதனை Posted on 28-Sep-2018 சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சோதனை

சென்னை
சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் நேற்று ஏற்கனவே 82 சிலைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச சிலைக் கடத்தல் மன்னனான சுபாஷ்கபூரின் நெருங்கிய கூட்டாளியான தீனதயாளன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 300க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன. பழங்கால ஓவியங்களும் கிடைத்தன. இவைகளை தீனதயாளன் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து திருடி அந்த வீட்டில் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தீனதயாளன் பழங்கால சிலைகளை தனது கூட்டாளிகள் பலரிடம் கொடுத்து வைத்திருப்பதை சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன்படி சைதாப்பேட்டை கோர்ட்டு பின்புறம் ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் ரன்வீர்ஷா என்பவரிடமும் தீனதயாளன் சிலைகளை கொடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சிலையை வாங்கியது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ரன்வீர்ஷா அளித்திருந்தார். அவைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று காலை மீண்டும் தனது அதிரடி வேட்டையை தொடங்கினார். டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினருடன் ரன்வீர்ஷாவின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார். சோதனையில் சிறியது பெரியதுமான 82 சிலைகள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவை கிரேன்கள் மூலம்  லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. 

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. நேற்று கைப்பற்றப்பட்ட சிலைகளில் மீதமுள்ள 8 சிலைகள் லாரியில் ஏற்றப்பட்டன. மேலும் வீட்டில் பதித்து வைக்கப்பட்டுள்ள 21 தூண்களையும் பெயர்த்து எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Label