OUR CLIENTS
மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி - முதல்வர் பழனிசாமி
மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி - முதல்வர் பழனிசாமி Posted on 28-Sep-2018 மின்சாரம் தாக்கி பலியான  குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி - முதல்வர் பழனிசாமி

சென்னை
மின்சாரம் தாக்கி பலியான 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், கல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் மனைவி சரஸ்வதி என்கிற எலையக்கா ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜாசமுத்திரம் கிராமத் தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஆனந்தி என்பவர் மழையின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சென்னை, திருவல்லிக் கேணியைச் சேர்ந்த ரபி உசேன் தேங்கிய மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந் தார். கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெயராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட் டம், மாதவலாயம் கிராமத் தைச் சேர்ந்த ரெத்தினராஜ் மின்கம்பத்தில் ஏறிய போது, மின்கம்பம் முறிந்து விழுந்ததில், பலத்த காயம டைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பெரியபிள்ளை வலசை கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், கெடகார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் எதிர்பாராதவிதமாக மின் கம்பியை மிதித்த தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிக்குப்பம் கிராமத் தைச் சேர்ந்த குத்புத்தீன் பலத்த காற்று மழையின் காரணமாக மின்கம்பி அறுந்து அவர் மீது விழுந்த தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், காப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ரேணு மனைவி கிருஷ்ணவேணி மின்சாரம் தாக்கி உயிரிழந் தார். தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சி யில் பணிபுரிந்து வந்த பாலமுருகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். க.புதுப்பட்டி கிராமம், மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழக பணியாளர் சுப்புராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், பகண்டை கிராமத்தைச் சேர்ந்த குமார் விவசாய நிலத்திற்கு சென்ற போது, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளுவர் தென்னை மரக்கிளையை வெட்டும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Label