OUR CLIENTS
துப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை!
துப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை! Posted on 02-Oct-2018 துப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை!

நாகப்பட்டினம், அக். 2-

 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு ஓதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் 2,070 கன்ட்ரோல் யூனிட், 3,800 பேலட் யூனிட், 2070 வி.வி.பாட் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதால், கிடங்குக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நாகை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட உள்ளதாக சேமிப்பு கிடங்கு அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள பகுதியில் அதிக அளவில் குப்பை இருந்ததால் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், சேமிப்பு கிடங்கு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி ஏந்திய பெண் காவலர்களை அந்த பகுதியை துப்புரவு பணி செய்ய கூறியுள்ளனர்.

 பெண் காவலர்களும் துப்பாக்கியை வைத்துவிட்டு துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்து குப்பைகளை அள்ளி வெளியே கொண்டு கொட்டியுள்ளனர்.இதைப் பயன்படுத்தி துப்பாக்கியையோ அல்லது வாக்குப்பதிவு இயந்திரத்தையோ எடுத்துச் சென்றுவிட்டால் இதற்கு பதில் சொல்ல வேண்டியதும், தண்டனைக்கு உள்ளாவதும் பெண் காவலர்கள் தான். துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை துப்புரவு பணி செய்ய பணித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

Label